பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 113 491. முத்து, ரத்னங்களால் அலங்களிக்கப்பட்ட (ஒரு) யந்திரத்தை ஒத்த விசித்திரமான வழியைப் பற்றினவர்கள், முன் சென்மத்திலேயே மூர்க்கராயிருந்தவர்கள், (அல்லது போர்க்கு முன் நிற்கும் மூர்க்கர்), மிக்க பாவஞ் செய்தவர்கள். முத்து உதிர்த்ததுபோலப் பேசுபவர்கள், (ஒத்த பத்ர வாட்கண்) பத்திரம் ஒத்த வாட்கண் - (பத்ரம்) வாள் போன்ற (வாள்) ஒளி விசும் கண்களை (அல்லது - பத்திரம் - அம்பு போன்றதும், வாள் போன்றதுமான கண்களை) உடைய முச்சர்-முஞ்சர். அழிந்து போவோர்கள்-மிக்க சூட்சுமம் - சூழ்ச்சியை தந்திரங்களை உடையவர்கள் சிரிப்பினாலேயே. ஏமாற்றுபவர்கள், (குத்திர அர்த்தர்) - வஞ்சனைப் பொருளுடன் பேசுபவர்கள் (துட்ட) துவர்டத்தனம் (முட்ட) முற்றின - முழுமையுமான (காக்கர்) துன்மார்க்கர்கள், தங்களுக்கு இஷ்டம் உள்ள கூட்டத்திற் சேர்பவர்கள்விலைமாதர்கள். (எக்கர்) இறுமாப்புடையவர்கள், துக்கத்தைத் தருபவர்கள் - (ஆன அம்மாதர்களின் வாழ்க்கையில் ஆசை. வைத்த மனநோய் ஆகிய புண்கொண்டு இப்படிப்பட்ட வழியில் அலைதல் உறுவேனோ! தித்தி மித்தி மீத் தனத்தனத்தம் என்னும் ஒலியை (மூட்டு அல்லது ஊட்டு) எழுப்புகின்ற சின்ன உடுக்கை சேட்டை (இயக்கம்) - இயக்கப்படும்-அடிக்கப்படும் தவில்(மேள-வகை), பேரி (முரசு) இவைகளைக் கேட்டு - அசுரர்கள் இங்ங்னம் ஆர்ப்பாட்டம் செய்வதைக்கண்டு. திசைகளிலிருந்த மக்களின் ஆக்கையில் (உடலில்)துக்கம் மலைபோல் மீக்கொள்வதை மேலிடுவதைக் கண்டு-அந்தத் துக்கத்துக்குக் காரணமாயிருந்த (சூரனை)ச் செக்கடற்குள் - சிவந்த ரத்தக் கடற்குள் ஆழ்த்திவிட்ட வேலாயுதனே! கல் (மலைபோன்ற) திரிபுரங்களை அழித்து நடனம் செய்த திருநீற்றர் (திருநீறணிந்த பெருமான்), கத்தர்(கர்த்தாகடவுள்), பித்தர், கூத்தர்-ஆம் சிவனுடைய குருநாதனே!