பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலியூர்) திருப்புகழ் உரை 615 பெரும்புலியூர் 895. (சதங்கை) கிங்கிணி, ரத்னங்கள் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு - இவை யிரண்டும் இசை பாடக், (கழுத்தில் அணிந்துள்ள) (சரங்கள்) மணி வடங்கள் ஒளியைப் பரப்பத், தோள் மேலே தோள்மேல் ஒளி பரப்பி விளங்க, (தனங்கள் குவடாடப் படர்ந்த பொறி) பொறி படர்ந்த தனங்கள் குவடாட - தேமல் படர்ந்துள்ள கொங்கை மலைகள் அசைந்தாட (மால்) ஆசையை விளைக்கும் அழகிய அம்பு போன்ற கண்(மறி) தடுத்துத் தாக்குகின்ற காதில் குழைகள் ஆட இனிமை வாய்ந்த மயிலின் (சாயல்) அழகைக் கொண்டு, மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி, ரம்பை போன்ற அழகினை உடையவர்களும், கரிய கூந்தலை உடையவர்களுமான (மங்கையருடனே) (அல்லது ரம்பையின் அழகு போன்ற அழகு நிறைந்த மைக்குழலாருடனே) நெருங்கிப் பழகி, படுக்கையே இடமாகப் பொருந்தி அதிலே அழுந்திக் கிடக்கும் என்மீது நீ சற்று இரங்கி உனது இரண்டு தாளைத் தந்தருளுவாயாக. சிதம்பரேசராம் சிவபிரானது குமாரனே! கடப்பமாலை அசைந்தாடச் சிறப்புற்ற மயில்மேல் வீற்றிருப்பவனே! சிவந்த கழுகுப் பறவைகள் (களிப்புடன்) ஆடப். பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து குவியும்படிக் கோபித்து அசுரர்களின் வேரைக் களைந்து எறிந்தவனே! பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி, வீரம் விளங்கும் அபிராமி - ஆகிய தேவியின் ஒப்பற்ற (பாலனே) குழந்தையே! பெரிய (வள்ளிமலைத் தினைப்) புனத்துக்குச் சென்று குறப்பெண் - வள்ளியுடன் கூடிப் பெரும் புலியூர் என்னும் தலத்தில் வாழ்கின்ற அழகிய பெருமாளே! (இருதாளைத் தருவாயே)