பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குங்காடுதுறிை திருப்புகழ் உரை 587 செழிப்புள்ள சோலையிலும் பூஞ்சோலைகளிலும் கரும்பு ஆலைகள் (புணர்க்கும் இசை) வேலை செய்யும் ஒலி கேட்கும் குரங்காடுதுறையில் குமரப் பெருமாளே! (நடிப்பதுமற் புகல்வேனோ) 884. (பொருளைக்) குறித்த நெஞ்சில் ஆசை கொண்ட காமிகள், பாடும் சங்கீதம் அமைந்த கண்டத்தினர், குதித்து நாடகமேடையில் ஏறி நடனம் செய்பவர்கள், யாரோடும் தங்கள் குறைகளை அடுத்துச் சொல்லிக் காதலை ஊட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள், (அரைப்பணம்) அரையில் உள்ள பாம்ப்ன்ன அல்குலை விலை பேசி விற்பவர்கள், கொலைத் தொழிலைக் காட்டும் கொடிய கண்பார்வை உடையவர்கள், நகத்தின் குறிகள் பதியப் பெற்றுள்ள அழகிய கொங்கையை உடையவர்கள், காயத் தழும்புள்ள்தும் கொவ்வைக்கனி போன்றதுமான வாயிதழை உடையவர்கள், பொருளைத் தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக நெஞ்சினர், தவசிகளும் சோர்ந்து போகும்படிச் செய்கின்ற பாப உருவத்தினர், மனத்தையும் உடலையும் உருக்கவல்ல (சம்போக சரசிகள்) புணர்ச்சி லீலை செய்பவர்கள் - அத்கையோர்களின் சேர்க்கையை விரும்பி மகிழும் மயக்கத்தை ஒழிக்கமாட்டேனோ! (நெறித்து) குழற்சியடைந்தும் சுருண்டும், (இருண்டும்) கருநிறம் கொண்டும். (ஆறுபதம்) அறுகால் - வண்டுகள் மொய்க்கும் மலர்களின் நறுமணம் கொண்டும் விளங்கும் புதிய மாலைகள் வகை வகையாகக் கட்டு தளரும் (மஞ்சு ஒதி) கருமேகம் போன்ற கூந்தலை உடைய (வனசரி) வேடப்பெண் வள்ளியின் மணவாளனே! சிறந்த பரத் தையர்கலவி செய்யாமை யுறுமேனும் மறந்தழையும் அவர் விழிக்கு வாடாத மனமில்லை' விநாயக புரா-திருநகர-82.