பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தலுர்) திருப்புகழ் உரை 567 நாதனே' - என்று முன்னொருகாலத்தில் (உன்னை உன் தந்தை) துதிசெய்ய, புவி ஆதாரம் ஆய்கைக்கு - உலகினருக்கு ஒரு ஆதரவுச் சாதனம் (பிரமாணம்) ஆகும் பொருட்டு முழுதும் நன்றாக நீ அருளிய நாகேசன்’ என்னும் திருப்பெயரை உடைய தந்தையால் (சிவபிரானால்) மெச்சப்பெற்ற பெருமாளே! (துட்டர்கள் ...கடைப்பிறப்பினில் உழல்வாரே) கூந்தலூர் 878. இது பூமியிலே நல்ல நெறியில் நில்லாது பல (தீய) வழிகளிலும் சார்ந்துள்ள மூடனாகிய என்னை, குடிவெறி கொண்டவன் போன்ற பித்தனை, (நிறை) மனத்தைக் கற்புவழியில் நிறுத்துதல், (பொறை) பொறுமை அடக்கம் இவை இருக்கவேண்டும் என்கின்ற விருப்பமே இல்லாத (மத சடலனை) செருக்குக் கொண்ட அறிவிலாப் பொருள் போன்றவனை, ஒருவித பெருமையும் இல்லாது தாழ் நிலையில் இருக்கும் வீணனை, நிரம்பின கேள்வி, தவவழி இவைகளை விட்டுத் (தாண்டு காலியை) கண்டவழியில் திரிபவனை, (அவமதியதனில்) கெட்ட புத்தியால் - பயனற்ற புத்தியால் - (பொல்லாங்கு) கேடு, தீமை செய்கின்ற (சமடனை) மசடனை - குணங்கெட்டவனை, வேண்டுமென்றே சாதியில் விலக்கப்பட்டவனாய்க் கதியற்றவனை (அல்லது, ஒழுக்கம் இல்லாத கதியிலியை) நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவர், பிடிவாதமுள்ள மாதர், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தை எழுப்பும் காமமயக்கிகள், கண் என்னும் வலையை வீசும் மகளிர் - இத் தகையோருடன் அவ்வச் சமயங்களில் கூடிய தொழில் உடையவனாகிய நான் நிரம்ப மலர்கொண்டு விரும்பிப் பூசித்தாகிலும், அல்லது ஒரு பூவோ ஒரு இலையோ கொண்டாகிலும். (உன்னை) நினைத்து, நல்ல வகையான அன்புடன் கீழே வீழ்ந்து உனது திருவடியைத் தொழுமாறு அருளுவாயாக