பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம்) திருப்புக ழ் உரை 553 873. (செனித்திடும்) பிறப்பு என்கிற (சலம்) பொய்ம்மையோடு கூடிய (சாழலும்) சாழல் விளையாட்டுப் போன்ற விளையாட்டாகிய கூத்து என்ன, (ஊழலும்) அந்தப் 蠶 கூடிய (ஊழலும்) ஆபாசம் என்ன, பிறப்பில் ஏற்படும் குடல், அந்தக் குடலைக் கிழித்தெழுவது போல மேனோக்கி எழுகின்ற ஆணவம் என்ன! (உடலுடே சதை பீளையும் ஈளையும்) (அந்த உடலில் உள்ள) சதை பீளை, கோழை என்ன! ஏற்பட்ட பல ஜாதி என்ன! (தங்கள் ஜாதி மேற்பட்ட தென்று) வாதிப்பவர் என்ன! கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன? இங்ங்னம் (சிலகால்) - சில சமயங்களில் (படர்) துன்பம் வருத்தம் (சினத்திடும்) கோபித்து எழுவதுபோல மிகுந்து எழும் (பவநோய்) பிறப்பு ஒரு நோய் என்றே இவ் வாழ்வை எலலாரும ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது என்று கூறுவதும், (பிணத்தை) எடுங்கள் சுடுகாட்டுக்குப் போக என்று (கூறுவதும்), அங்கேபோய்க் கவிழ்க்கப்படுவதுமான இந்த உடல் (தீயால்) பொடியாகச் சாம்பலாய்விடும்; அத்தகைய உடலை நான் விரும்பிப் போற்றி. (அவ்வுடலை அலங்கரிக்க) கடுக்கன் ஆதிய சில ஆபரணங்களை அணிவ து என்ன! (ஆடைகள்) உடைகள் அணிவது என்ன, (இருக்கு) வேத மந்திரங்களாற் பெறப்படும் (கலை சாத்திர நூல்கள் படிப்ப்து என்ன, பல திறத்த ஆசை வகைகளைக் கொண்டிருப்பது என்ன!. ஆக ՅՈGll எல்லாவற்றையும் ஒழிக்கவல்ல் சிவ யோகத்தையும் சிவ ஞானத்தையும் அருள் புரிவாயாக. தனத்த னந்தன தானன தானன....தகுத்து என்று ಳ್ಗಿ பறை, (தாரை) நீண்ட ஊதுங்குழல், (விராணம்) ராணம்-பெரிய ப்றை, இவையுடன் (அட்ல் பேரி).வெற்றி முரசு இவைகளுடன் கூடிப் (பொருதலுக்கு) போருக்கு என்று கூடி வந்த அசுரர் சேனையை வளைத்துக் கொடிய கோபங்கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தின பராக்ரமசாலியே! (உனது (சமத்து) திறமையைத் தெரிந்துள்ள மாதவர் பால் முநிவர்களுக்கு அருள் பாலிப்பவனே!