பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம்) திருப்புகழ் உரை 551 மிகவும் (திரங்கி) வற்றிச் சுருங்கி, ஒரு தடியைக் கையிலே நடுக்கத்துடன் பிடித்த அவமதிப்புக் கிடமான மனைவியும் (நிந்தித்து) இகழ, பக்கத்திலுள்ள அடுத்துள்ள ಶ್ಗ (வசைகள் விளம்ப) பழிக்க, அறிவில்லாத பொருள் போலாகி, உடலெலாம் அழுக்கு சேர, வேதனைப்படும் உடலுக்கு இடமாம் சேறுபோன்ற (அல்லது பாவத்துக்கு இடமான) பிறப்பு என்கின்ற கடலில் j போவது ஒழிந்து, (அடுத்திருந் திருவடிதனை) இரும் திருவடிகளை அடுத்து பெருமை வாய்ந்த (உனது) திருவடிகளை அடுத்து சரண்புக்கு என்று நான் பொருந்தி இருப்பேனோ! வெளியிடங்கள் எல்லாம் பொடிபட்டு மிகவும் நிலை கலங்கவும், பெரிய கடலும் அதனது உட்புறமெல்லாம் குழம்பிக் கலங்கவும், (ஆங்காங்குள்ள) அசுரர்கள்மீது புகவிட்டு அவர்களை அரக்கிய தேய்த்துச் சிதைத்த சாமர்த்தியமுள்ள குதிரையாகிய மயிலேறும் பராக்ரமசாலியாகிய வீரனே! (பொருப்பு) கிரெளஞ்சகிரியின் (உரம்)-(படர்) படர் உரம் பரவியிருந்த வலிமை (பரந்த திண்மை) பிளவு உண்டு அழிந்து போகும்படி வெற்றியடைந்து, (பகைவர்களை) அட்டுகொன்று, அரக்கர்களின் வலிமை கொண்ட தலைகள் நெரிபட்டு (அழிய) - நெருங்கச் சென்று உள்ளடங்கியுள்ள சதை, ரத்தம் இவைகள் (பொங்க) மேலெழப் போர்செய்த வேலனே! சிறிய தண்டைகளை அணிந்தவனே! (மதலையோர்) பிள்ளைகள் பயப்படும்படி (அல்லது சிறிய தண்டைகள் அணிந்த (வேட்டுவக்) குழந்தைகள் பயப்படும்படி) (சினத்து மிஞ்சு அரி) கோபம் மிக்க சிங்கம் திரிகின்ற (வள்ளி) மலையில் தினைப்புனத்தில் விளங்கியிருந்த குறமகள்) வள்ளியின் கொங்கையாம் மலையை (மேவி) விரும்பி, அடைந்து (அதனால்) செருக்கு - மகிழ்ச்சிகொண்ட நெஞ்சத்தை உடைய முருகனே! மயில் என்னும் குதிரை சுமக்கின்ற குமரனே! கடம்பனே! திருக்குடந்தையில் கும்பகோணத்தில்) வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! (திருவடிதனை யென்றுற்றிடுவேனோ)