பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1098

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிபுவனம்) திருப்புகழ் உரை 539 திரிபுவனம் 866. வில்லைப் போன்ற நெற்றியில் வெயர்வு உண்டாக, கண்கள் குழியிட்டுச் சுருங்க, வளையல்கள் சப்திக்க, சில ருசிகரமுள்ள் அன்புப் பேச்சுக்களைப்பேசித். தழுவுகின்ற (பொது) மகளிருடைய அரும்புவிட்டுத் தோன்றும் கொங்கை மார்பின்மேல் தைக்க, சர்க்கரையும் கசக்கின்றது என்று சொல்லும்படியான வாயிதழ் ஊறலைக். கனவிலும் பருகுகின்ற புணர்ச்சி என்கின்ற வலையிலே (நான்) கட்டுப்பட்டு, (என்) உயிரானது தட்டுப்பட்டு (மாட்டிக்கொண்டு) அழிந் து போகின்றது தானோ (எனக்கு இட்ட விதி): நல்ல கதியைப் பெறுதற்கு வேண்டிய விதிப் பயன் இல்லாதவன் (நான்), அறிவு இல்லாதவன் (நான்).அத்தகைய நான்) உன்னுடைய இரண்டு (கச்சு உற்ற) கால் பட்டிகை அணிந்துள்ள், சிறிய, வெட்சி, தாமரை அணிந்துள்ள திருவடியைப் பெறுவேனோ! கூர்மை மிக உள்ள குலிசாயுதனாகிய இந்திரனது மகள் தேவசேனையின் கஸ்துாரி யணிந்ததும், புளகம் கொண்டதும், முத்துமாலை அணிந்ததும், அழகியதுமான கொங்கை மீது இச்சித) ஆசை கொண்டவனே! கடல். ஒலமிட்டுக் கதறவும் பழைமைவாய்ந்த அசுரர்களின் கூட்டம் பின்னிட்டு ஒடவும், முற்றிலும் பொடிபட வெட்டிக் குத்தின சிங்க வீரனே! ஞானானுபவத்தை (அளிதரும்) கொடுக்க வல்லதாய் (நிகழ்த்ரும்) உள்ள ஒப்பற்ற உபதேசப் பொருளை (பிரணவப் பொருளை) தந்தையாம் சிவபிராற்கு அந்த அருமையான வகையில் (அல்லது அந்த கூடிணமே) உபதேசித்து அவரால் பூசிக்கப்பெற்ற (குருமூர்த்தியாம்) தலைவனே! எல்லாப் பொருள்களும் அழியுங் காலத்தும் தான் அழியா நிலைபெற்று நிற்கும் திரிபுவனம் என்னும் ஸ்தலத்தில் =9/9X5 கொண்ட சித்திகளில் வல்ல சித்தர்களுக்கெல்லாம் தம்பிரானே! (செச்சைப் பத்ம பதம் பெறேனோ)