பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1074

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை 515 (பந்தி) கூட்டமாய் (வரிசையாய்) (மந்தி) குரங்குகள் வருகின்ற செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை இவை (துன்றியவனம்) பொருந்திய சோலை (சூழ்ந்த) திருப்பந்தனை நல்லூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் சரவணப் பெருமாளே! (வினை...கெடும்படி யருட் புரிவாயே) 859. தேன் (தேன் என இனிக்கும் வாயூறல்) உள்ள வாயிதழ்களை யுடையவர், பளிங்கு போன்ற வெண் பற்களையுடையவர், குளிர்ந்த பேச்சையுடையவர், அம்புகள் போன்ற கண்களையும், அழகு சிறந்த முகவார்) முகத்தையும், உடையவர், (இளம்பிறையது) இளம்பிறை போல்வது (என்) என்று சொல்லத்தக்க (புரூவர்) நெற்றிப்புருவத்தையுடையவர். வண்டுகள் பொருந்திய கூந்தலை உடையவர், (களங் கமுகினார்) கமுகு களத்தினர் - கமுகு போன்ற மெல்லிய கழுத்தினை உடையவர், (புயங்கழையினார்) மூங்கில் - கரும்பு - போன்ற தோளையுடையவர், கொங்கைகள் மலையை நிகர்க்க (சிவந்த வடிவார்) சிவந்த நிறத்தினையுடையவர், துவட்சியுற்ற இடையையும், புண்டரீகம் (தாமரை போன்ற) அல்குலையும் கொண்டவர்,* (சூனி யங்கொள் செயலார்) (சூனியம்) மயக்கும் மந்திரத்தை (மாரண வித்தையைக்) கொண்ட தொழிலினை உடையவர். (அரம்பை) வாழை போன்ற தொடையை யுடையவர், (சரண்கமல நேர் - கமலநேர் சரண்) தாமரை ஒத்த பாதத்தை உடையவர், இளம் பருவத்தையுடைய (இள) மயில் போன்றவர், சந்தன முதலிய பூசிக் கொள்பவர்இத்தகையாருடன் செய்யும் சேர்க்கை இன்பத்திலே

  • இடை-சூனியம்கொள் செயலார். புண்டரீகம் சூனியம்கொள் செயலார்-இடை (சூனியம்) இல்லை என்றே சொலத் தக்கவர். அல்குலை விற்கும் தொழில் சம்பந்தமாகச் சூனியம் வைப்பவர். எனவும் பொருள் தொனிக்கும்.