பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை - 99 பாசங்கள் (ஒரு வழியாய் அடியோடு ஒழியாமல்) விட்டு விட்டு (இடையீடுடன்) விட்டு ஒடிப்போனது போதும்: இவ்வாறு இடையிடையே பாசம் விலகும் நிலைவேண்டாம்; இனிப் பாழ்படும் நெறியில் (என்னை) புகுத்து அடைக்காமல் (என்னைப்) பிடித்து அடியேன் இப்பூமியில் (உனக்கு) அடைக்கலமாக வைக்கப்பட்ட ஒர் உருவமாம் எனக்கொண்டு, என்னைத் (தாபரித்து) ஆதரித்து நித்தியமாகிய ஆரம் (ஓர் ஆபரணம்) ஆம் இது என்று என்னைப் பாத தாமரையாம் நல்ல மலரில் என்று அருளுவாயாக; ஞானம் இலாத துஷடனும், கொடுமை வாய்ந்தவனும்: குற்றம் உள்ளவனுமான குரனை வெட்டி, எட்டு திசைகளிலும், ஏழ் உலகங்களிலும் உள்ள தேவர்களுக்கும் முத்திநிலை கண்ட பெரியோர்களுக்கும் இருந்த துன்பத்தை ஒழித்தருளி. யவனே! சிறப்பு பொருந்திய நெருப்பு, சூலம், மான், மழு இவைகளைப் (பாணி) திருக்கரத்திற் கொண்ட (வித்துரு பவள (நிறத்) திருவடியுடையவனாம் (சிவனுக்கு) ΦΟή பாகத்தில் உள்ள சீர் விளங்கும் புகழ் நிறைந்த பாவை (தேவி பார்வதி) பெற்றருளிய அழகிய குருநாதனே! காசி, முத்தமிழ் விளங்கின. மதுரை, திருவேங்கடம், திருக்கோவலூர் திருஆனைக்கா வேதாரணியம் கனககிரி (அல்லது கயிலை, அல்லது மேரு), சீகாழி திருவாரூர் அழகிய புலியூர் (சிதம்பரம்) வேளுர் (புள்ளிருக்கு வேளுர் - வைத்திசுரன் கோயில்). சீகாளத்தி அதன் பின் திரிசிராமலை ஆக நாடு முழுமையும் மூன்று காலங்களிலும் பூஜை நடத்தப்பெற்று, அழகிய விரும்பத்தக்க கச்சியில் மிகவும் வீற்றிருக்கும் (அதிக காதலுடன் மேவும்)அழகிய பெருமாளே! (பாத பத்ம நற்போதையே தரித் தருள்வாயே)