பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1034

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாரணியம்) திருப்புகழ் உரை 475 845. நூலுக்கு ஒப்பான இடை, தேருக்கு ஒப்பான அல்குல், சிலம்பு அணிந்த பாதங்கள் இவைகளாலும் (நூல்திசை நூல்கள் மூலமாகத் திசைகளிற் புகழ்பெற்ற தகுதி வாய்ந்த (அல்லது (நூறுஇசை நூற்றுக்கணக்கான (மிகுந்த இசைபெற்ற கீர்த்திபெற்ற தகுதிவாய்ந்த) மேருமலையை ஒத்த கொங்கைகள், தாமரைமலரை ஒத்த முகம் அவைகளாலும் சேல்மீனை ஒத்து நிற்கும் கண்களாலும் (ஆடவர்களை) அழைக்கின்ற பெண்களின் தேன்போல் இனிக்கும் வாயிதழைப் பற்றி அனுபவிக்கின்ற ஒரு இன்ப வலையில் நான் முழுகி. என்னுடைய ஆசாரங்கள் அனைத்தையும் ஒழியவிட்டு, காமலீலைகளிலேயே அழுந்தினவனாய், தேர்ந்து அடையத்தக்க தவநிலையை இழந்து அலைச்சல் உறுவேனோ! பால இளம்பிறை, தும்பை, கங்கை, கொன்றை, கரந்தை |திருநீற்றுப் பச்சை வாசுகி என்னும் பாம்பு இவைகளை அணிந்துள்ள சிவபெருமான் பெற்ற குழந்தையே! மகாபலிச் சக்கரவர்த்தி (பாதலத்தில்) சிறையில் ஒடுங்க, ஒரடியால் (ஒட்டி) பேசின பேச்சின் படிவாக்குதத்தத்தின்படி, அளவிட்டும், அம்பைச் செலுத்தி இலங்கை அரசனான இராவணன் இராவணன்மேல் (வாளி பரப்பி) அம்பைச் செலுத்தி அவன் தலை பத்தையும் அரிந்தும், அவன்தோள் இருபதையும் அரிந்தும், வீரம் மிக்குநின்ற திருமாலின் மருகனே! விரும்பத்தக்க திருத்தணிகை, திருச்செந்துளர், பெரிய பழநி, இம் மூன்று தலங்களிலும் ப்ரீதிகொண்டு வேதாரண்யத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (தவத்தை யிழந்து திரிவேனோ) "ஆனவாசுகி அன்றுற வின்றும் ஞானமேனியர் மேனியனாகந் தானுறைந்திடு தன்மைய தாமே"திருவொற்றியூர் புரா.வாசுகி.87 0 மாவலியைச் சிறையிட்டது - பாடல் 268-பக்கம் 166கி. ழ்க்குறிப்பு