பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1000

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிக்கல் திருப்புகழ் உரை 441 கரை கடந்து எழுந்த கடல்போல உள்ள ரத்தத்தை மொண்டு உண்ணும்படிப் போர் புரிந்தவனே! சேர்க்கை யன்பு பூண்டு குறமகள் வள்ளியைத் தழுவின முருகனே! பெருமை தங்கிய திரியம்பகபுரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவி அருளிய கந்தனே! ஆறுமுகனே என்று உனது இரண்டு திருவடிகளையும் பணிந்து நின்று தேவர்கள் தொழுதற்குரிய பெருமாளே! (இழிதொழி லதுவற அருள்வாயே) சிக்கல் 830. கற்கண்டு (அல்லது கரும்பு) போல இனிக்கும் பேச்சுக்களைப் பேசும் வேசியர், கடினமான மனத்தையும் உருக்கவல்ல லீலைகளைச் செய்பவர்கள், கண்கொண்டு வெருட்டி விழிக்கின்ற பார்வையர், இனிய வழியில் பககுவமாகக கையில் உள்ள பொருள்கள் மயும் வைத்திடு இப்படி என்று கூறிக் கையை விரிக்கின்ற வினினர் (பயனற்றவர்), கைகளைப் பிடித்து இழுத்து மார்பிற் கொங்கைமீது விழும்படியும், பின்னி வைத்துள்ள கூந்தலிலே மலர்களை வைத்துப் (பொருள்) முடிப்பை நீ அவிழ்ப்பாயாத என்று கூறுகின்ற அற்ப குணத்தராகிய அவ் வேசையர்களின் ஆசையில் நான் அலைச்சல் உறாமல் சொல்லப்படும் இயல் இசை நாடகம் எனப்படும் முத்தமிழில் ஆசை கொண்டவனே என்று முத்தி நிலை அடைந்த பெரியோர்கள் போற்றிசெய்ய மகிழ்கின்ற நாயகனே! (அல்லது) மகிழ்கின்ற பிஞ்ஞகர்க்கு (சங்கரிக்கும்) சிவனுக்கு உபதேசச் சொல் சொல்லும் (நாயகனே) தலைவனே! அருள் தருவாயாக. அக்கினிக்கு ஒப்பான படைக்கலங்கள் முதலிய ¦ಸ್ಥಿತಿ @j)55@J)@TT 3D_@TML [L1 அரக்கர்களின் பெரிய தலைகள் பூமியில் அற்றுவிழும்படிச் செய்கின்ற திருமாலின் மருகனே!