பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 93 பொட்டணிந்த முகத்தின் அழகிய ஒளி வீசும் மாது உமாதேவி, என்மீது திருவருள் வைத்து என்ன்ன ஆண்டருளின் நாயகி, சிவபிரானது திருவுருவத்தில் (இடது பாதியிற்) சேர்ந்துள்ள பார்வதி, சிவகாமி மூன்று புவனங்களையும் படைத்த நாடகத்தினள், குமரி சுகத்தையே அணிந்துள்ள காரணசக்தி, சிவன், தேவி ஜோதி, பராசத்தி, சாம்பவி, அ(ம்)மை (பிராட்டி) பெற்ற குழந்தையே! பேய்கள் ரத்தத்தில் நன்றாய் முழுகவும் நரியும், கழுகும், (உண்டதால் உடல்) உப்பி - உப்ப ப்ெருக்கச் சமயம் வாய்ந்த தென்று வாயை வைத்து (உண்ண)வும், அசுரர்களுடைய குலத்தைச் சுட்டு அழித்த வேலாயுதத்தைத் திருக்கரத்தில் உடையவனே! தேவர் மகளாம் தேவசேனை மீது சென்ற ஆசை கொண்ட தேவனே! குறத்தி (வள்ளியை) ஆண்டவனே! நாள்தோறும் அழகு விளங்கி மேம்படக் காஞ்சியில் வீற்றிருக்கும் பெரும்ாளே! (துாவையர் உறவாமோ) 483. வரிசை நிறைந்திருந்த பல் வேர் (அடி) அற்று விழுந்து போகப் பாழ்படும் சட்டையான (இந்த உடலின்) செயல்கள் தடுமாறி, (மயிரெலாம்) கொக்கின் நிறமாய் வெளுத்து (உடல்) கூன் அடைந்து, (கையில்) ஊன்றுகோல் பிடித்துக் கொட்டாவி (விட்டத்), தலை குனிதலை அடைந்து (இங்ங்ண்ம்) வாசி நிலை வேறுபாடுகளை அனுபவித்து நின்றார், (பின்னர்) இறந்தார், (ஐயோ) கெட்டேன் எனக் கூறிக் கதறி "அ ஆ உ உ" என்னும் ஒலியுடன் உறவினர் =9/90