பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/997

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை கநக மலை (இது கிணற்றுக் கடவு கோயமுத்துாரிலிருந்து 12 மைல். வடஆற்காடு போரூர் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கு 9 மைல். தேவிகாபுரம் என வழங்குவர். மலை கனகாசலம். மலைமேல் கோயில். கல்வெட்டு உள்ளது. இறைவர் - கனககிரீசுரர். தேவி பெரியம்மை) 400. வணங்க தனதனன தனண தந்தத் தனதனன தனண தந்தத் தனதனன தனண தந்தத் தனதான அரிவையர்கள் தொடரு மின்பத் துலகுநெறி மிகம ருண்டிட் * டசடனென மனது நொந்திட் டயராமல்அதுதினமு முவகை மிஞ்சிச் சுகநெறியை விழைவு கொண்டிட் டவநெறியின் விழையு மொன்றைத் தவிர்வேனோ, பரிதிமதி நிறைய நின்ற.. தெனவொளிரு முனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற் றகமேவும். படர்கள்முழு வதும கன்றுட் பரிவினொடு துதிபு கன்றெற் பதயுகள மிசைவனங்கற் கருள்வாயே: செருவிலகு மசுரர் மங்கக் குலகிரிகள் நடுந டுங்கச் சிலுசிலென வலைகு லுங்கத் திடமான. செயமுதவு மலர்பொருங்கைத் தலமிலகு மயில்கொ ளுஞ்சத் தியைவிடுதல் புரியு முன்பிற் குழகோனே, இங்கு ஆயுத எழுத்து வல்லோசைச் சந்தத்துடன் நிற்கின்றது.