பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/972

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - ராச - மலை திருப்புகழ் உரை 499 தேடி நிற்கும் வேசையரோடு (பொழுது போக்கும்) உடல் கொண்ட பொல்லான் (அல்லது உண்மைப் பொல்லான்) என்று உறவாடுகின்ற எனது மலங்களை (ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை) அழித்து நீக்கி, ஒளி வீசும் சீவனோடு ஒன்று பட்டதான ப்ரம்பொருள் விளக்கக் காட்சியை வந்து தந்தருளுக. வேகம் (கோபம்) தோன்றி, உமை கூறினவுடனே (தக்கனுடைய) பெரிய மகம் மேற்கொண்டு நடப்பதை அழிக்கும் பொருட்டு ஒளிநிறைந்த "வீர பத்திரன்" எனப்பட்ட பர்ாக்ர்மசாலியாகிய ஒப்பற்றவன் தோன்றிவர, அன்று, சந்திரன். (முன்பக்கத் தொடர்ச்சி) தக்கனது பெருவேள்விச் சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி மிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்" - (சம்பந்தர் - I 131 -3) "வேகம் உண்டாகி உமை சாற்றின" வாசகம் - "சிறிய தொல்விதி பெரிதுனை இகழ்ந்தனன் பெரும அன்னவன் அரிதுசெய் வேள்வியை அழித்தி என்னவே" (கந்த புரா - உமை வரு 59) தேவர்கள் அடைந்த தண்டனைகள்: அரி - கதைய தொன்றால் அடித்தனன்' அரிமுன் வீழ்ந்தான்' பிரமன் - குட்டினன் ஒருதன் கையால்' I நாமகள் - மூக்கொடு குயமும் கொய்தான்." சந்திரன் - வீரன் தன்னொரு பதங் கொடே தேய்த்திட்டான்' சூரியன் - கதிரவன். கவுளிடை எற்றினான் உகுப்பத் தந்தமே. பிறிதொரு சூரியன் - பகனெனும் வெய்யவன் விழிபறித்தனன் கூற்றுவன் (எமன்)- கூற்றுவன். ஒடலும் வெட்டினன் அவன் தலை." இந்திரன் - வாசவன் குயிலென உம்பரில் அடைந்தனன், அண்ணல் வீட்டினன்' அக்கினி - அங்கியை - அவன் கரத்தைத் துண்டமதாகவே துணித்து வீட்டினான். தக்கன் - ஈசனை இகழ்ந்தனை அதனால் தண்டம் ஈதென வாள் கொடே அவன் தலை தடிந்தான். (கந்தபுராணம் - யாக சங்காரம் - 20-50)