பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/968

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கொல்லிமலை திருப்புகழ் உரை 495 மலையும் உருகும்படியாக மூங்கிலில் கட்டப்படும் “பசுக்கள் அழகிய புகுமிடம் வந்து சேரும்படி நின்று குழல் ஊதுகின்ற (புல்லாங்குழல் ஊதுகின்ற) Kokool/L. உடையவனாம் (கண்ணபிரானாம்) திருமாலாகிய விடையின் மேல் ஏறும் உம்பன் (பெரியோன்), புன்சடையோன் - ஆகிய எந்தை சிவபிரான் கைதொழுது நிற்க மெய்ஞ்ஞானத்தைப் போதித்த ஒளி வேலனே! (தினைக்) கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் (தினைப்) புனத்துக்குச் சென்று, (உயிரைக்) கொள்ளை கொளும் மன்மதனது கைம்மலர்ப் பாணங்களின் செய்கை யாலே - கொய்து தழை (தழை கொய்து) எடுத்துக் கொண்டு சென்ற கட்டழகுடையோனே! கந்தனே! கொல்லிமலை மேல் விளங்கும் பெருமாளே! (ஆனந்த பெளவ முறவே நின்றதருள்வாயே) (முன்பக்கத் தொடர்ச்சி) " நினை எந்நாளும் பளித்திடவே அறங்கள் கெழும மழ விடையாய் அடிமை கொண்டாய்" - உபதேச காண்டம் (ஞானவரோதயர்) 2135 - 6. S தழை கொண்டு - அகப்பொருளில் தழை கொண்டு சேறல் என்பது ஒரு துறை, தலைவிக்குக் கையுறையாகத் தலைவன் 'சந்தனத் தழை, போன்ற தழை ஆடை உடுக்கத் தருவது. மலயத்து ஆரத் தழை யண்ணல் தந்தால் யவள் அல்குற் கண்டால், ஆர் அத்தழை கொடுவந்தார் எனவரும் ஐயுறவே. திருக்கோவையார் 91. ( வள்ளிக்குத் தழை ஆடை கொண்டு சென்றதாக அருணகிரியார் இங்குக் குறிக்கின்றார். "தழை யுடுத்த குறத்தி" என்றார். 296 - ஆம் பாடலின் கீழ்க்குறிப்பைப் பார்க்க 1 மழவன் - கட்டழகுடையோன்