பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/942

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 469 378 வருத்தம் உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும், மயக்கம் கொள்ளும்படி அவர்களொடு தாக்குண்ணும் துரம் (சுமை) இது (இவ்வுடல்) - இத்தகைய துன்பங்களோடு கூடிப் பொருந்திய உயிர்கள் நற்கதி காணாது கேடு அடைய இறந்து போகும் மக்களுடைய உறவைக் கொள்ளாமல் பெருத்து வளரும் பாவம் மிக்க மும்மலங்களின் கொடுமை கூடிய (இப்) பிறப்பு ஒழியவே உன்னுடைய இரு திருவடிகளை (நான்) பெறுமாறு (எனக்குத்) தந்து (என்னை) ஆண்டருளவும், மேலான சுவர்க்கத்தை நான் சேரவும் நீ அருள் பாலிக்கும் சத்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுக. ரத்தம் பெருகிப் பாய உடலிலும் மார்பிலும் தாக்கி வேல் கொண்டு எதிர்த்தும், சூரர்கள் இற்க்கப் போர்புரிந்த வேலனே! i ஒலிக்கின்ற தாளமும் மேளமும் தனத் தந்தான தானன என்னும் ஒலின்யக் காட்ட, வலிய சிவக்ணங்கள்ர்கிய பூதங்கள் கோடிக் கணக்கிற் பக்கங்களிற் சூழ திருந்திய அன்புடன் ஒப்பற்ற மயிலை விரும்பி ஏறியே புகழ்மிக வளர்ந்து அன்ப்ே உருவாக மேம்பட்டு விளங்கும் பெருஞ் செல்வமே! திரண்ட சங்குகள் உள்ள ஒடை (நீர் நிலைகளும்) குளங்களும் மிகுத்து, காவி மலர்கள் (கருங் குவளை மலர்கள்) சூழ்ந்து மலரும் திருச்செங்கோட்டில் 'ို႔ို வீற்றிருக்கின்ற பெருமாளே! --- (அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே) 379 ஆலகால விடத்தை உடைய பாம்பின் படம்போன்ற அல்குலை உடைய மடமாதர்கள், நெய்ப்பு ஈரம் கொண்ட வாள் போல மிகவும் தாக்க வல்ல கண்களை உடையவர்கள், யாவராயிருந்தாலும் விரும்பி அழைப்பவர்கள், தெருவின் மத்தியிலே. -