பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/934

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கேடு திருப்புகழ் உரை 461 தொண்டு செய்யும் பணியை மேற் கொண்டு, அட்டாங்கமாய் வீழ்ந்து வணங்கி, நான் கண்டு பற்றுதற்கு (உனது) தண்டை வர்க்கப் பங்கயத்தை (தண்டை இனங்கள் - தண்டை, சிலம்பு முதலிய அணிந்துள்ள) தாமரை போன்ற திருவடியை, துங்க ரத்தப் பங்கயத்தை - பரிசுத்தமான செந்நிற முள்ள பங்கயத்தை - திருவடித் தாமரையைத் தந்தருளுக. கிரவுஞ்சகிரியை எடுத்துப் பந்தடித்துச் சங்கரித்து பந்தை எடுத்து எறிவது போல வேலால் எடுத்தெறிந்து அழித்து கண் சிவக்கக் கோபித்து அழித்து - (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல, இந்திரனுக்கு - இ ஈ ஈந்த அளித்த தேவ லோகத்தவனே! (இந்திரனுக்குத் தேவ லோகத்தை ஈந்தவனே அளித்தவனே)! கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால் அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் தண்டையும் (கதையையும்) மலையையும் கூட அமுக்கி (அடக்கி) அடக்கக்கூடிய அவ்வளவு பலத்துடன் சண்டை செய்து பொருத (எதிர்த்துப் போர் புரிந்த) யானையைப் - போய் உரித்து, பார்வதிக்கு இருந்த பயத்தை நீக்கி கண் களிப்புடன் சிந்தையில் பற்று ஒன்றும் இல்லாமல் நாள் தோறும் மகிழ்ச்சி கொள்ளும் . செண்பக மலரணியும் சம்புவாம் சங்கரனுக்குத் தொம்பதத் துக்கு (தத்வமசி என்ற வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு விளக்க இயல்பை எடுத்து விளக்கித் திருச் செங்கோட்டில் தங்கி வீற்றிருக்கும் அழகிய பெருமாளே! (தண்டை வர்க்கப் பங்கயத்தைத் தருவாயே)