பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/924

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 451 வஞ்சகமாகப் புகுந்து ஒளிக்கும் சூலமேந்திய கையினனாய் நெருங்கிய சூரன் அழிபடும்படி சென்று அவனை ஒட வைத்து, முன்பு, வாளாயுதத்தைச் செலுத்திக் களிப்புற்ற (பன்னிரு கைத் தோள் கொத்தை உடையவனே! வண்டு பாடல் பாடி இசை எழுப்பும் தோட்டத்தில் உள்ள குளிர்ந்த குராமலர் சூடிய (பொன்-புர) அழகிய சரீரத்தனே! (அல்லது பொற்பு-உர-அழகிய மார்பனே): கும்பு கூட்டி அடியார் கூட்டத்திலிருந்து காட்சியளிக்கும் இளையவனே! கொஞ்சும் சொற்களை உடைய கிளியைக், குளிர்ந்த சேல்மீன் போன்ற கண்ணைக் கொண்ட (வள்ளி) மலை வேடப் பெண்ணைக், கண் காட்டி அழைத்துக் கொண்டு போய் அவளை விரும்பித் திணைப்புனத்துக்கு அடுத்த பசுங்காவில் அணைந்தவனே! வாசனையை வீசி உலவச் செய்து தழைத்து நிற்கும் சோலைகளில் அழகிய மேகங்கள் நிறைந்து சிறக்கும் காட்சியைக் கொண்ட கொங்குதேசத்தில் உள்ள திருச்செங்கோட்டுப் பெருமாளே! (திருக்கண் சாத்தப் பெறுவேனோ)