பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 447 372 கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க, வடித்து எடுக்கப் பட்ட சிறப்பான கரும்பின் சாறு என்று சொல்லத்தக்க மொழியால் (பேச்சினால்) கருத்தையும், நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளாம் (பொது மகளிரின்) கடைக்கண் நோக்கத்தில் (நான்) அழிவு உறாமல் - (அத்தகைய மயக்கத்தை) விலக்கவல்ல ஞானோபதேசத்தை எனக்கு என்றே பெற (பிறருக்குக் கிட்டாத வகையில் நான் ஒருவனே சிறப்பாகப் பெற்று விளங்க ஆசை மிகவும் கொண்டுள்ள நான் (ஊழ் ) வினையின் பயனாக மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் பொருட்டு, நீ "அஞ்சல்" எனக் கூறி(ப் புரந்து) அருள்வாயாக . (தேவர் முதலானோரை) அலைத்து வந்த அசுரர்கள் குலத்துச் சேனைகளை அறுத்த கூரிய வடிவேலனே! அழைத்து உனது சீரிய திருவடிச் செந்தாமரைகளை அடுத்துள்ள (பற்றியுள்ள) ஞானத்தை உடையவர்களாகிய (முன் பக்கத் தொடர்ச்சி) அருணகிரியாரும் அத்தகைய ஞான போதகத்தைப் பெற்றார் என்பது. கடத்திற் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்திடத்திற் புணையென யான் கடந்தேன் காம சமுத்திரமே" என வரும் கந்தரலங்காரத்தாலும் (29), "பிமரங்கெட மெய்ப் பொருள் பேசியவா" என்னும் அநுபூதியாலும் (8) விளங்கும்.