பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 372. மனத்தில் தீமை அற தனத்தந் தானன தனத்தந் தானன தனத்தந் தானன தனதான கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய கருப்பஞ் சாறெனு மொழியாலே. கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையி லழியாதே; விலக்கும் போதக மெனக்கென் றேபெற விருப்பஞ் சாலவு முடையேனான். வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை விடற்கஞ் சேலென அருள்வாயே

    • அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை

அறுக்குங் கூரிய வடிவேலா அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை யடுக்கும் போதக முடையோராம்; தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் பொய்யில் புலவர் திருவாக்குக்கு ஏற்ப, யாரும் பெறாத ஞானத்தையும், வாக்கு வன்மையையும் தாம் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டவர் அருணகிரியார். o " போதகம் எனக் கென்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான்" என்று இந்தப் பாடலிலும், "எனக்கென்றப் பொருள் தங்க, தொடுக்கும் சொல் தமிழ் தந்து ஆள்வாய்" என 33ஆம் பாடலிலும் கூறுவதைக் காண்க "சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன். பெற்றது ஆர்பெறுவார் உலகில்" என்னும் திருப்பல்லாண்டு இங்கு உணர்ந்து ஒப்பிடத் தக்கது. (அடுத்த பக்கம் பார்க்க)