பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/914

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 441 369 வண்டு தேன் உண்டு மயக்கம் கொண்டு (மயக்கத்துடன்) வந்து மொய்க்கின்ற மேகம் போன்ற கூந்தலுடன் - வளப்பம் பொருந்திய மன்மதனுடைய (மலர்ப்) பாணத்தின் கால் மடங்க (செவ்வி) குறைய (செவ்வியையும் குறைக்கவல்ல) வலிய போரை எதிர்த்த கண் என்னும் வேற்படைன்யயும் - கொண்டு வளைந்து கண்டவர்கள் சஞ்சலம் அடைய நிற்கின்றவர்களாம் (பொது மகளிரின்) தென்னங் குரும்பை ஒத்த கொங்கையில் விருப்பம் வைத்து (மனம் பொருந்தி) பூங்கொத்துக்கள் நிரம்பித் தோன்றும் உனது திருவடியை மறந்து நான் அழிவு அடையாமல் உனது திருவருளைத் முன்பு முதலே, சக்கரம், சங்கு இவைகளுடன் கடலில் தங்கும் (துயில் கொள்ளும்) தன்மை வாய்ந்த திருமால் மகிழும் மருமகனே! இசை பொருந்தவும், உள்ளம் நெகிழவும், நண்பை (அன்பான துதிகளை) ஒதும் அன்பர்களின் பங்கில் நிற்கும் குமரேசனே! (அசுரர்களைச்) சிதற அடித்துத் தேவர்கள் கொண்டாடச் சபையில் நின்று ஆடும் (சிவபிரான்) உள்ளத்தில் மகிழ்கின்ற செல்வமே! செந்நெல் (மிஞ்சி - மிஞ்ச) மிகுந்து வளர மேகங்கள் சஞ்சரிக்கின்ற (திருச்) செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே! (நின்தாள் மறந்து குன்றாமல் உன்றன் அருள்தாராய்)