பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/909

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 367. அலைச்சல் அற தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த தனதான அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற நினையாமல். அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் முலைதானும்: கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி . குன்றா மலைந்து அலைவேனோ, மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை யணிவோனே. வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே tதொலைந்த வடிவேலா! #சென்றே யிடங்கள் கந்தா S எனும்பொ --- செஞ்சேவல் கொண்டு வரவேணும். செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த பெருமாளே. (1) மலைதல் - ஒருவழிப்படாது நிற்றல். tதொலைந்த தொலைத்த

  1. இந்த அடி மிக்க அருமையான மனப்பாடஞ்செய்ய வேண்டிய மகுட அடியாகும்.

S எனும்பொ எனும்பொழுது.