பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 407 நிலைத்த ஞானம் இல்லாத அறிவினர் - குரு என்னும் தானத்தைப் ..!! ஒரொருத்தர் (சிலர்), ஞான்ேப தேசத்தையும் செய்வார்கள்; (அப்படிப்பட்டவர்கள்) தருகின்ற ஞான உபதேசம் புகலாகுமா (பற்றுக்கோடு ஆகுமா) ஆகாது என்றபடி 'ಕ್ಲಿಲ್ಲಿ ಕ್ಲಿಕ್ಗೆ பெருஞான சித்திய்ைக் கொடுக்கு மென்றால் அங்ங்னம் கொடுக் கின்ற அதை (அந்தப் பொருளை) நான் காண இல்லையே! குரு நாட்டை இராசரிகம் (அரசாட்சி) செய்த துரியோதனாதியர் கூட்டத்தின் குடி அழியும்படி மாயச் செயல்களைச் செய்து, குந்திதேவியின் குழந்தைகளான தரும புத்திரராதி. யோரை அழிந்து போகாமற் காத்து, நீதி முறையை நிலைப்படுத்தி, ஏழுலகையும் (அவர்கள்) ஆளும்படி வைத்தவனும், குறளனுடைய தேக அளவினனாய் வந்து (வாமன ரூபன்ாக வந்து கெடுதலிலாத நீண்ட உருவத்தை (திரிவிக்ரம ரூபத்தைக்) கொண்ட ஆதி மூர்த்தியாம் திருமாலின் மருகனே! திரிபுரத்தைப் பகைத்து எரித்தவனும் (எல்லாம் வல்ல) சித்தனுமான அந்த மூர்த்தியின் மிக்னே விராலி எனப்படும் அழகிய மலைமேல் உலாவுகின்ற சித்தனே! அழகிய கையில் வேல் ஏந்தியவனே! மதுராபுரியில் வீற்றிருக்கும் சொக்கநாதரின் உண்மை விளங்க, (மதுரையை) ஆண்டிருந்த பாண்டியனுடைய கரத்தைப் போக்கி வளைவுபட்டிருந்த (அவனது) கூனையும் நிமிர்த்தின தம்பிரானே! (ஞான சித்தி. கண்டிலேனே!) (முன் பக்கத் தொடர்ச்சி) சமணரொடு செய்த வாதிற் சம்பந்தர் வெற்றி பெற்று சிவபிரான து மெய்மையை உலகுக்கு விளக்கியருளினார். "அமணிருள் மாய்ந்த தன்றே" "தேனலக் கொன்றையார் தந் திருநெறி நடந்த தன்றே" என்றார் சேக்கிழார் பெருமான். (பெரிய புராணம் - ஞானசம் 858, 859).