பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை குருக டாகடிக லாவே தாகம பரம வாக்கிய ஞானா சாரிய குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக வன்பரான. கொடிய வேட்டுவர்'கோகோ கோவென மடிய நீட்டிய கூர்வே லாயுத #குருகு கூேத்ரபு ரேசா Sவாசுகி அஞ்ச மாறும்; செருப ராக்ரம "கேகே வாகன சரவ ணோற்பவ மாலா லாளித திரள்பு ttயாத்திரி யீரா றாகிய கந்தவேளே. 'கோ கோ எனல் - பேரொலி செய்தற் குறிப்பு: - முருகவேள் வள்ளியைக் களவாடிச் சென்றபோது வேடர்கள் அவரைப்பின் தொடர்ந்து சூழ்ந்து கோ கோ என்னும் பேரொலி செய்து வளைந்தனர். அது கண்டு வள்ளி "ஐயனே! நும் மேல் அம்புகளைச் செலுத்தும் அவர்கள்மீது வேலை ஏவுங்கள்" என வேண்டினள். அப்போது கொடி மேல் நின்ற சேவல் ஒரு கொக்களிப்புப் பேரொலி செய்ய வேடர்கள் யாவரும் பொள்ளென வீழ்ந்து மாண்டனர். பின்னர் நாரதரின் வேண்டுகோளின்படி, முருகவேளின் சொற்படி, வள்ளி யாவரும் எழுக" என்னலும் வேடர்கள் உயிர் பெற்றெழுந்தனர் - என்பது வரலாறு. கோகோ - எனல் - பேரொலிக் குறிப்பு:- போர்வேடர் கோ என" - திருப்புகழ் 940. 'கோ கோ என்று வந்திருகை தலை புடைத்து" (பாரத - பதினேழாம் - 254). பேரொலியுடன் முருக வேளைச் சூழ்ந்தனர். என்பது. 'குறவர்கள் முதல்வன் தானும் கொடுந் தொழில் எயினர் யாரும் மறிகடல் என்ன ஆர்த்து. அம்பு வீசி முருகனை வளைந்து கொண்டார்" . கந்த புராணம் வள்ளி திருமணம் - 181. மடிய நீட்டிய வேலாயுதம் - " வள்ளி தன்னை. நும்மேற் செல்லத் தொட்டிடு கையர் தம்மைச் சுடருடை நெடுவேல் ஏவி அட்டிடல் வேண்டும்" என்றிவை குமரி செப்ப. சேவல் ஆர்ப்புக் கொள்ள... யாரும் பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார்" - கந்த புராணம் - வள்ளி திருமணம் 183, 184, (அடுத்த பக்கம் பார்க்க)