பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 67 22 கூந்தற்பாரம் அலைந்து குலைய, முகத்தில் வியர்வை தோன்றி நுடக்கம் தர, வசமழியும்படி மோகம் உண்டாகிப் பிணிக்க, அணைமேலே - சிவந்த வாயினின்றும் சிரிப்பை வெளிப்படுத்தின க்ளிப்புடன் நெருக்கிய நகங்களின் நுனிகொண்டு விகாரம்ாம்படி செய்து (நகக் குறிகளை யிட்டு), இதழ் (அமுதைக் குடித்து) உண்டு இடையற்றுப் போம்படி முலைமேல் வீழ்ந்துஉள்ளமும் மாறும்படி சேர்கின்ற மாதர்களின் (பின்னர்) வருத்தந்தருவதான இன்பத்திற்சேர்தல் ஒழியும் வன்ண்ம் உள்ளம் தெளிந்து அன்புடன் சிவ்யோக நிலையில் - உருகுகின்ற ஞான உரிமைத் திறங்கொண்ட அறிஞர்கள் கிருதுகின்ற் சிலம்பணிந்த (உன்) இரண்டு குளிர்ந்த தர்ம்ரை போன்ற மெல்லிய திருவடிகளைத் தருவாயே! தளராது வளரும் சந்தன குங்குமக் கலவை (பூசியுள்ள) நிறைந்த கொங்கை ய்ழகைக் கொண்ட) ரதி தேவியின் (கணவனாம்) காமவேள் பணிகின்ற தந்தையாம் திருமாலும், அந்தண மறையோனும்(பிரமனும்), இனிமையை இழக்க (துன்புற), அங்கு இருந்த இந்திரனும் தேவர்களும் "ஹர ஹரா! சிவ சங்கர சங்கர!" என்று முறையிட்ப் பொங்கி எழுந்து வந்த நஞ்சை (ஆலகால விஷத்தை) உண்டவராம் (சிவபிரான்) அருளிய குழந்தையே! வளர்ச்சியுற்ற அவுணர்களுடைய தலைகள் பொடிபடும்படி பகைமை காட்டிய நற்சிறப்புற்றவனும், மகர மீன்கள் (வாழும்) கடலைக் கடைந்த நெடிய மேகத்தின் நிறத்தைக் to கொண்டவனுமான திருமாலின் மருகனே! வளர்கின்ற வாழையும் மஞ்சளும் இஞ்சியும் எப்போதும் நெருங்கி ( விளங்கும்) மங்கலமும் மையும் உள்ள சிறந்த நகரமாம் திருச்செந்தூரில் வந்து உறைகின்ற பெருமாளே! (பங்கய மென்கழல் தருவாயே)