பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 283 கிண்கிணி மாலைகளையும் நிறைந்த தோரணங்களையும் கொண்ட அமைதி பூண்ட தெருக்கள் உள்ள பெரிய ஊர், தேர் சுற்றி வரும் பெரிய ஊர் - தேவர்கள் யாவரும் புகழும் பெரிய ஊராகிய தணிகையம்பதிப் பெருமாளே! (தேசுக்கதிர் கோடி யெனும் பதம் அருள்வாயே) 312 செயமே தரவல்ல கரும்பு வில்லின் முனையை வளைத்து மன்மதன் செலுத்தின பாணங்கள் மேலே தைத்த வேகத்தாலும். வெட்ட வெளியிடங்களிலும், தெருக்களிலும், வட்டமான பறை போல விளங்கி - நெருப்பை வீசி ஒளியைப் பரப்புகின்ற நிலவாலும். பற்றிவசை (வசை மொழிகளைக் கொண்டு) அவைகளையே பயின்று பேசும் பல மாதர்களின் (வசைப்பேச்சாலும்) இசையை எழுப்பும் மூங்கிலாலும் (புல்லாங் குழலின் இசையாலும்) நான் மெலிவுற்று அழியாமல். பத்தி நெறியை எனக்குத் தந்துதவி முத்தியையும் அளித்துதவ உயர்ந்த பச்சை மயில் மீது ஏறி வர வேண்டுகின்றேன். •. 'நெற்றிக் கண்ணின் தி பட்டு (மன்மதன்) எரிந்துபோக, நடனம் செய்த பெரியோன் (சிவபிரான்) tஉன்னைத் தியானிக்க அவர் மனத்தில் பொருந்தி எழுந்தருளிய திருவடிகளை உடைய வீரனே! (அவர் மனத்துக்கு சந்து - இனிமைதரு கழல் வீரனே! 'ஒரு வீரச் செயலின்பின் இறைவர் ஒரு நிட்டம் இடுவர் (நடனம் செய்வார்). காமனை (மன்மதனை)ச் சிவபிரான் எரித்த தலம் திருக்குறுக்கை அது மாயூரத்துக்கு அருகில் உள்ள தலம். அங்கே உள்ள நடன சபையின் பெயர் " காமாங்கநாசனி சபை" (வேதாரணிய புராணம் - சபைச் சருக்கம் - 6) t சிவபிரானுடைய தியானத்தில் இருந்தது முருகன் திருவடி - "சடைப்பரமர் சித்தத்தில் - வைத்த கழலோனே" என்றார் 306ஆம் பாடலிலும்