பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 273 தலையில் நிலவு, கங்கை (நதி), தும்பை, இள அறுகம்புல் மணம் வீசும் கொன்றை இவைகளைச் சடைமுடியில் அணிகின்ற பெருமானார் (சிவபிரான்). தந்த குமரனே! விடங் கொண்ட ஐந்து தலைகளை உடைய பாம்பு பூசித்து வணங்கும் பெருமாளே! தணிகைமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (கவலை கெட நினதன்பு பெறுவேனோ) 308 மொகு மொகு (கம கம) என்னும் வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் ஆசையுள்ள (தாமரை மலரில் வீற்றி. ருக்கும்) இலக்குமி போன்ற மகளிருடைய - நெய்ப்பும், கருமையும் கொண்ட கருமேகம் போன்ற கூந்தல் சரிய, ஒன்றுபோல (ஒருசேரப்) பருத்து வளர்ந்துள்ள அதிக கனங் கொண்ட கொங்கைகள் புளகம் கொள்ள, வளையல்கள் ஒலிசெய்ய, முத்துக்கள் போன்ற பற்கள் இள நிலவின் குளிர்ந்த்) ஒளியை வீச, மிகவும் தவிப்புக் கொள்ளும் சில மொழிகள் அசைவுற்று வெளிவர, இடை நெளிவுஉற, வட்டவடிவான வில்லை ஒத்த புருவங்கள் இரண்டும் வளைவு உற, அகில், மிருகமதம் (கஸ்தூரி) பன்னிர் விட்டு அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கலைய (அல்லது மலர் கலைதலுற), ஒளி கலந்த ரத்னங்களால் அமைக்கப்பட்ட வீசம் குழைகளுடன் போர் புரிவதுபோல நீண்டுள்ள கண்கள் மிகவும் சிவக்க (இவ்வாறு கலவியின்பத்தில்) அமர. (பொருந்துவதால்), மதம் (கொள்கைஅறிவு, மகிழ்ச்சி), நீதி நாக தீர்த்தம் திருத்தணி மலையின் மேல் - மேற்குப் பக்கத்தில் குருக்கள்மார் வீடுகளுக்கு எதிரில் உள்ள விஷ்ணு தீர்த்தத்துக்கும் அப்பால் மேற்கே சென்றால் தென்புறம் இருக்கின்றது.