பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட திரைக ளெறிகடல் சுவறிட களமிசை திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் பெருகாறாச். சிகர கிரிநெரி படபடை பொருதருள் திமிர தினகர குருபர இளமயில் சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் பெருமாளே. (56) 305. திருவடியைப் பெற தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனதான முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தி லிலகிய விழியாலும். முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும் இளைத்த இடையினு மயலாகிப்; படுத்த அணைதனி லணைத்த அவரொடு படிக்கு ளது.தின முழலாதே. பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன பதத்து மலரினை யருள்வாயே; துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ தொடுத்த சரம்விடு ரகுராமன். துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு துலக்க அரி திரு மருகோனே: - - - - o - = 'உலகை அளந்தது - பாட்டு 268-பார்க்க