பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 265 சகல சம்பத்தும் உடையவர் இவர் என்றும், ஒப்பற்ற தனிப் பெருமையை உடைய வில் வல்ல அருச்சுனனே ர் என்றும், சூரியன் வலம் வரும் மேருவை நிகர்ப்பார் இவர் என்றும். இசைப் பாட்டுக்களைப் பாடி கற்பிளவை ஒத்த (சற்றேனும் நெஞ்சம் இளகாத) லோபிகளின் இடங்கள் தோறும் நடந்து திரியும், யாசகத் தொழில் (பிச்சை யெடுக்கும் தொழில்) நீங்கவும், உனது இரண்டு பாதங்களை அட்ையவும், பல்திறத்த அடியவர்களின் தவ நிலை வருமாறு அருள்புரிவாயாக சகல புவனங்களையும் முறைப்படி தந்த இமயமலை மயிலாம் (உமை), சிரேட்டமான் ம்ல்ையாம் மேருவை வில்லாகக் கொண்டு, xதிருவதிகை என்னும் #႕ႏိုင္ဆိုႏို திரிபுரத்தை ஒரு நொடிப் இi:', அபிராமி. பொருந்தி யிருக்கும் இடது பாகத்தை உடையவன் ttநெருப்பு என்னும் ஒப்பற்ற உருவத்தினன், Hவாக்குக்கு எட்டாதவன், SSபழந் தமிழுக்கு உரியவன், திருமாலும், பிரமனும், உலகோரும் அறிதற்கு அரியவன், நடனம் ஆடும் 鸞 ஆகிய கடவுளின் செல்வனே! (முன்பக்கத் தொடர்ச்சி) x திரு அதிகை (வீரட்டானத்தில்) புரம் எரித்தது: "செற்றார் வாழுந் திரிபுரந் தியெழ விற்றான் கொண்டெயில் எய்தவர் வீரட்டம்" அப்பர் V -53-4 " வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே" - சம்பந்தர் 1-46-8. ஒரு நொடியில் எரித்தது: 'திரிபுரம் ஒரு நொடியினில் எரி சென்று கொள்வகை" . சம்பந்தர் 1-124-6. tt சிவன் அனலுருவன்: 'பொங்கு அழல் உருவன்" - சம்பந்தர் II-120 -1. # இல் உரையவன் - உரை யிறந்தவன்; உரைக்கு எட்டாதவன் "உரைக்குங் கழிந்திங்கு உணர்வளியான்" அப்பர் IV.99.5. SS முதுதமிழ் உடையவன் - பாட்டு 126 - குறிப்புரை பார்க்க