பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 259 303 முகத்தை மினுக்குபவர்கள், முட்டாள்கள், வஞ்சகர்கள், கண் விழிக்கொண்டு மருட்டுபவர்கள், கர்வம் கொண்டவர்கள், திருடிகள், மொழி கொண்டு மயக்குபவர்கள் (ஆகிய பொது மாதர்களின்) உபாயத்திலும் நகையிலும், ஒருவகையான முழித்து, மோகங் கொண்ட அறிவிலி, ஒழுக்கமிலி, புழுவுள்ள இக்குடலை (உடலை)ப் பொருளென்று மிகவும் எண்ணி அந்தப் பொது மகளிரைத் தழுவுதற்காக அவர்களை அடுத்துத் திரிகின்ற அடியேனுடைய இடர் நீங்க மிகுந்த அழகைப் பெற்ற அறுமுகனே! சரவணனே! உனது திருப்புயங்களில் நெகிழ்வுற்று மணம் வீசும் தேன் நிறைந்த பூ மாலையும், மிகவும் வேகமாகச் செல்லும் கடுமை கொண்ட பச்சைநிற மயிலும், கூரிய வேலும், வெளிப்பட்டு என்முன் எதிர் தோன்ற, இரவு - பகல் என்னும் வேற்றுமை அற, (கேவல சகலங்கள் அற்ற சுத்த அருள் நிலை உற) லட்சுமீகரம் பதிய (அழுத்தமாகப் பொருந்த), (உனது) திருப்புகழை அமுது பொருந்தும் பாடல்களாகச் சொல்லிப் (பாடி), விதி (பிரமன்) எழுதின எழுத்து (என் தலையெழுத்து) மெலிந்து அழிதர, மேம்பட்டு விளங்கும் ஒப்பற்ற பொருளை உபதேசித்தருளுக. (முன் பக்கத் தொடர்ச்சி)

  1. வரு மொரு பொருள் அருளாயோ - என்னும் பகுதியில் வரும் ஒரு பொருள் - அருள் - என்பது வரு - மொரு - பொரு - ளருள்' என மிகச் சிறிய ஒரு தனிப்பாடலாக அமைவது கண்டு மகிழ்தற்பாலது. இது கரந்துறை பாடல்’ எனப்படும்.