பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 253 300 பொன்னாலாய குடம் போன்ற கொங்கையை அசைப்பவர்கள், கையில் பொருள் புகுந்த பின் (கிடைத்த பின்) தான். புட்குரல் காட்டி மாய வித்தைகளைக் குழறிப் பேசும் பேச்சுக்களை உடையவர்கள், பொட்டணிந்த நெற்றியை உடையவர்கள், மெல்லிய இடையில் ஆடையைச் சுற்றி நெகிழ்த்தும் செயலினர்கள், அற்பர்கள், அந்தப் பயனற்றவர்களாகிய (பொது மகளிரிடத்தே) சென்று (அவர்களுடைய) அந்தக் கண் வலைக்குள் அகப்படுகின்ற புத்தியை (என்னை விட்டு) நீங்கச் செய் து அருள் புரிவாயாக, கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து, இடக்கை இவைகள் முழங்கும் ஒலி ஒலிக்கத் (தணிகையில் வீற்றிருக்கும் குமரேசா): கொக்கின் இறகு, அக்கு (எலும்பு), அர (பாம்பு) மத்தம் (ஊமத்தம் பூ) இவைகளை அணிந்துள்ள மணிக்கு (அல்லது அணிக்கு அணிந்தவனுக்கு (சிவபிரானுக்கு ரகசிய உபதே. சத்தை அருளியவனே! தணிமலைக் குமரேசனே! சர்க்கரை, முப்பழம் (வாழை, மா, பலா) இவைக்கு ஒப்பான மொழியை உடைய குறத்தி (வள்ளியின்) கொங்கை மலை மேலே தைத்துள்ள (அதிக பற்றுள்ள) மனத்தனே! சமர்த்தனே! அரக்கர் தலைக்கூட்டத்தைக் கொத்தி (வெட்டி) அழித்த (செவி) வேளே! (கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்தருள் வாயே!)