பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகிை திருப்புகழ் உரை 233 கொடுமை வாய்ந்த பாணம் (உன்மேல்) பட்டு உருவ நீ) அதனால் காமவேதனை மிகுதியாய் அடைந்து அச்சத்துடன் (சென்று), மான்கள் பல உள்ள (அல்லது வேட்டையில் பல அழிந்த வள்ளிமலைக் காட்டுக்கு. உரிய கமரியாகிய (வள்ளிக்கு) அபயம் என்று உரைத்து, மனம் நெகிழ்ந்து அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து (அந்த) மான் மகளைத் தழுவ மோகங்கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே! (உனது குவளைச் சிகரி பகரப் பெறுவேனோ) 291 தாக்குகின்ற போர் வந்தால் ஒப்பற்ற சாரைப் பாம்பு போலச் (சீறிப்பாய்பவன்), பிறிதொரு சாட்சி கூட இல்லாமல் மிகவும் என்து பசியையே போக்கிக் கொள்பவன் (தனித்து உண்பவன்), திருநீறு இடுகின்ற நூலின் உபதேச மொழிக்கு வெகு :് உள்ளவன், வேர்பாய்வ போல அழுத்தம்ான ஆழ்ந்த தவநெறியில் முழுகுவதற்குச் (சிறிதேனும்) நோக்கம் (கருத்து) (என்பதே இல்லாமல் திரிகின்ற பாவி, நா வல்ல புலவர்கள்போல அன்பு கொண்டு உன்னைக் கருதாமல், பன்க (மூட்டவல்ல) தமிழைக் குலைக்கின்ற நாய், (அல்லது மனிதர்கள்ன் வலிமையைப் புகழ்ந்து பாடும் தமிழ்ப் பாக்கள் பாடிக் குலைக்கின்ற நாய்) நாள்தோறும் (நாள் முழு அளவும்) தடுமாற்றம் கொண்டவனாய் (கலக்கம் உற்றவனாய்) போய்ச் சேர நல்ல இடம் ஒன்றும் இல்லாத விணன், ஞானிகளைப் போற்றும் குணமில்லாத துரோகி (பாதகன்), பெரிய மயக்க அறிவு நிரம்பிய (ஆணவம், கர்மம், மாயை எனப்படும்) மும்மலங்களும் நிறைந்தவன், சரியான (முதல் தரமான) கீழ்மகன் (ஆகிய என்னைக்) கை விடுதல் நீதியோ அடியார்களோடு போய்ப் பெறும்படியாய் (இந்த எளியனுக்கு) န္က% நற்கதி! போரில் வல்லதும், ஒளி வீசுகின்றதும், வயிரம் போல் திண்மை கொண்டதும், கூர்மை கொண்டதுமான வேலாயுதத்தை உடைய மியில் வாகனனே! அருள்புரிவாயாக