பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 289. நன்றி மறவாமை தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தனதான கொந்து வார்'குர வடியினுt மடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவிய குருநாதா! Sகொங்கி லேர்தரு பழநியி லறுமுக செந்தில் காவல தணிகையி லிணையிலி: "கொந்து காவென மொழிதர வருசம யவிரோத, தந்த்ர வாதிகள் பெறவரி யது.பிறர் சந்தி யாதது தனதென வருமொரு சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து விரைநீபச். முருகன் விளங்கும் இடத்தைக் கூறுகின்றார்:- குர வடி - திருவிடைக் கழியிற் குராமரத்தினடி (திருப்புகழ் 201 பார்க்க). f அடியார் உள்ளம் :- "அன்பினராய்... புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்" சம்பந்தர் -132-6.

  1. வேத முடிவு:- நெறி பல கொண்ட வேதம் - 'சாகை ஆயிரம் உடையார் சம்பந்தர் II 94.1 சாகை - வேதத்தின் உட்பிரிவு. ஆதியாகிய குடிலையும் ... ... வேதம் யாவையும். குமரவேள் பொருவிலா உருமம் - கந்தபுரா - அவைபுகு - 132. சுருதியின் முடிவு தெளிதரு பரம' போரூர்ச் சந்நிதிமுறை பெருங்கழி 1. பாடல் 21 அடி 5 பார்க்க.

S "ஆறுமுகம் ஆறுமுகம்" என ஆறு முறை கூறும் 161 ஆம் பாடல் பழநிக்கு உரியதாயிருத்தலால் பழநியில் ஆறுமுக தரிசனம் இவருக்குக் கிடைக்கப் பெற்றுப் பழநியில் அறுமுக என்றும், திருச்செந்துாரில் தேவசேனாபதியாய் விளங்கின. ராதலின் செந்தில் காவல' என்றும், தணிகையில் அழகராய் விளங்குகின்றாராதலின் தணிகையில் இணையிலி' என்றும் முருகனை அழைக்கின்றார் போலும் புரமெய்த இணையிலி. சம்பந்தர் 1-125-6. செந்தில், பழநி, தணிகை - இம் மூன்றுமே முருகன் தலங்களுள் பிர பலமாய் அருணகிரியார் காலத்திலும் விளங்கின போலும். இம் மூன்று