பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 219 பொலிவுற்று மதம் கொண்ட யானை போன்றும், மலை போன்றும் அக் கொங்கை-பளபள என்று பிரகாசிக்க - உடுத்த ஆடையைக் கொண்ட இடையை உடைய பொதுமகளிர் (தங்கள்) புயத்தாலும், வளைப் பிலுக்காலும். (பகட்டாலும்), நடைக் குலுக்காலும், மிகவும் பசப்பி (இன்முகம் காட்டி ஏய்த்து), மோகத்தை ஊட்டித் தவத்தை அழிப்பார்கள் அத்தகைய அப்ப்ொது மகளிருடைய சம்பந்தம் ஆமா! (சம்பந்தம் கூடாது என்றபடி); பூமியின் மத்தியில் விளங்கும் மேரு மலையை வில்லாக வள்ைத்து (அல்ல்து, பூமியில் தனுவை (மேரு எனும்) வில்லை வளைத்து) ஒப்பற்ற முப்புரங்களைப் பொடிபட்டு விழும்படி எரித்து மழு ஆயுதத்தைத் தரித்து, புலி, யானை இவைகளின் தோலை உடையாக அணிந்து, தவநிறைந்த தேவர்கள் முதலானோர் பிழைக்கத்*தனது கண்டத்தில் அடக்கின விஷத்தை உடைய சட்ைப் பெருமானாம் சிவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி (பிரணவப்) பொருளைக் #; யானைத் தோலைப் போர்த்தது . கயாசுரன் என்பவன் பிரமனிடம் வரம் பெற்றுப் பேராற்றல் பெற்று மன்னவர், விண்ணவர் யாவரையும் வருத்தினன். யானை முகம் கொண்ட அந்த அசுரனைச் சிவபிரான் உதைத்துத் தள்ளித் தேவியுங் கலங்க, அந்த யானையின் ரத்தம் ஒழுகும் ஈரத் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார் . (விரிவைக் கந்த புராணம், ததிசி உத்தரப் படலத்திற் காண்க). S பரமாக அம்பரமாக (ஆடையாக) அம்பரம் முதற் குறைந்து பரம்' என்றாயிற்று.

  • விடம் மிடற்றில் அடக்குதல் -

திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது, மந்தர மலை மத்தாகவும்: வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் அமைய கடைந்த வேகத்தில் வாசுகி லகால விடத்தைக் கக்கிற்று; அந்த விடாக்கினியைத் தாங்கமாட்டாது j ஆதிய தேவர்கள் சிவபிரானைச் சரணம் ஆடைய, அவர் அந்த விட்த்தைப் பற்றி உண்டு தேவர்களின் பயத்தை ஒழித்தனர் அங்ஙனம் காத்ததற்கு என்றும் அடையாளமாக அந்த விடத்தைக் கண்டத்திலேயே விளங்க வைத்தனர். 221ம் பக்கம் பார்க்க