பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 53 16 தண்டை யென்கின்ற அணி, வெண்டையம் (வீரர் அணி காலனி), கிண்கிணி, சதங்கை, 'அருட் கழல், சிலம்பு (இவையெலாம் ஒன்று பட்டுக்) கொஞ்சி ஒலிக்க உன்தந்தையைச் (சிவபிரானை) முன்னர் அன்புடன் சீவலம் வந்து நல்ல மகிழ்ச்சியுடன் அணைந்து நின்ற (அந்த) அன்பு போலவே, (இப்போது நான்) உன்னைக் கண்டு மனம் ஒருமைப்பட கடம்பும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற செங்கைகளும் கொடியும் வேலும் அல்லது குராதிகளை அழித்த வேலும், (பன்னிரு) கண்களும், (ஆறு திரு) முகங்களும், நிலவொளிகளும் (என்) க்ண் குளிரும்படியாக என் முன்பு வந்து தோன்றாவ்ோ? தாமரையான் (பிரமனது) உலகு, மற்றுள்ள வெளியண்டங்கள் (இவையெலாம் மகிழ்ச்சி) பொங்கி எழ, (நீ) கொடிய போர்க்க ளத்தில் எழுந்தருளியபோது பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கும் நிறைந்து நின்று, முன்பு 'பிரமன் தந்தையாகிய திருமாலும் (அல்லது திருமாலும் உன் தந்தையாம் சிவனும்) மன மகிழ்ச்சி மிகக் கொள்ள, 1. தண் - அருள். 2. பழத்துக்காக வலம் வந்தது. 3. போர்க்களத்தில் விசுவ ரூபங் கொண்டதைக் குறிக்கும். புவனம் அண்டம் வானவருயிர்கள் யாவும் ஆறுமா_முகத்து வள்ளல் மேனியில் அமைந்ததன்றி வேறிலை யென்ன Tஆங்கோர் வியன்பெரு வடிவங் கொண்டான்' . கந்த புராணம் - சூரபன்மன் வதை, 422. 4. புண்டாகர் - தாமரையாதனத்துப் பிரமன், தாமரைக் கன்ன னாம் திருமால்.