பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 203 அந்த பால் நிறைந்த கடலில் (பாற்கடலில்) விஷமுள்ள அரவு (ஆதிசேடன்) ஆகிய அணையின் மேல் துயில் கொள்ளும் அச்சுதன் (திருமால்) மகிழும் அழகிய மருமகனே! (அல்லது இலக்குமியின் மருமகனே!) (கங்கை) நீரை அணிந்துள்ள சடை அரன் (சிவன்) மெச்சிய தணிமலை அப்பனே! அழகிய பெருமாளே! (பத மலரிணை இப்பொழுதணுகவுன் அருள் தாராய்) 280 கவடு (வஞ்சகம்) கொண்ட சித்தர்களும், ஆறு சமயங்களை மேற்கொண்ட (வாதஞ் செய்யும்) வெறியர்களும் சிறந்த கடவுளர்களின் (திருவுருவப்) ப்ரதிஷ்டை என்று (நிலை பெறுத்துகை) என்று, பலபல வகையாக யோசித்து நியமித்து (அக்கடவுளர்க்குப்) பெயர் குறிப்பிட்டு வைத்து, உருவ அமைப்பு ஏற்படுத்தி (இங்ங்னம் எல்லாம்) இடர் (துன்பத்துக்குக்) காரணமான உட்பொருளிற் புகுதற்கு வேண்டிய பங்கீட்டினை (திட்டத்தைச்) செய்து (ஏன்) - அலைய வேண்டும்! - சவடிக்கு - பொற்சரடுகளிற் கொத்தாக அமைந்த (கழுத்தணிவகை)க்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும் அணியப்படும் சரிக்கும் (வளையல் வகைக்கும்) மிக்க (மேலான) சரப்பளிக்கும், (வயிரம் அழுத்தின) கழுத்தணி வகைக்கும் கண்டசரத்துக்கும், (பொதுமகளிர்க்குக் கொடுக்க வேண்டிப்) பொருள் தேடிகளாகிய மாக்கள் எல்லாவற்றிலும் ஒன்றுபட்டும் (ஏகிபாவமாக வியாபித் திருந்தும்) (அவைகளிற் கலவாது) புறம்பாய் அயலாகி நிற்கும் உனது திருவடியின் கீர்த்தியைச் சற்றேனும் உணர மாட்டார்களா (ஐயோ! பாவம்) , o 202 -ம்பக்கத் தொடர்ச்சி 'ஒற்றை பட்டு ஏகிபாவமாக வியாபித்து ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்றல் - "இந்திர ஜாலம் புரிவோன் யாவரையும் தான் மயக்கும் தந்திரத்திற் சாராது சார்வது போல்" என்றது போல - கந்தர் கலி வெண்பா.