பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 201 tதிரு நீறு இட்டு நினைக்கின்றவர்களின் புத்தியில் அன்ன்ப் நிரம்ப அளித்தருளும் சற்குருவே! நீலோற்பலம் மலர்கின்ற திருத்தணி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ) 279 ரவிக்கை யணிந்த இள முலை, முத்தாபரணம், பல வகையான கை வளையல்கள் இவையெல்லாம் ஜொலிக்க (பிரகாசிக்கத்) (தங்கள்) காம இச்சையைக் கூறி. (வந்த ஆடவர்களின்) கையில் உள்ள பொருளைக் கவரும் மை நிறைந்த் கண்ணினர் - பாம்பின் படம் ஒத்த அல்குலை உடைய மட மாதர் (மீதுள்ள) (உடலும் உள்ளமும்) உருகின தழும்பினன், அறிவில்லாதன், శ్రీ వేసి நிறைவான ஒப்பற்ற பொருளை, அறியாதவனாகிய எனக்கு இந்தப் பூமியில், (உனது) மணநாறு சீரடி மலரினைகளை இப்ப்ொழுதே நான் அணுகும்படியாக உனது திருவருளைத் தந்தருளுக. இடையர் மனையில் இடைச்சியர் தயிரை விரும்பித் திருடின் குறைபாட்டினாற் கிடந்திருந்த உரலோடு சென்று (உரலை இழுத்துச் சென்று) நல்லதொரு பாக்கியச் செய்கையை அறிந்து செய்த (மருதிடைத் தவழ்ந்து, சாபத்தால் மருத மரங்களாய் இருந்த இருவர் சாபத்தைப் போக்கிய) கேசவன். வீரமுள்ள கருடவாகனத்தில் வரும் கேசவன் (திருமால்). tதிருநீறிட்டு நினைப்பவர் புத்தியில் இறைவன் விளங்குவர்; அருள்பாலிப்பர். " நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றாணை" சுந்தரர். VII - 30-2. "தூய வெண்ணிற்றினராகி உன்னிநைபவர்க் கல்லால் ஒன்றும் கை கூடுவதன்றால்". சம்பந்தர் - 1904 திருநீறிட்டவர் எதிரிலும் செல்லாதிர் என நமன் துாதுவர்க்கு அப்பர் எச்சரிக்கை செய்கின்றார். "நமன் தூதுவீர்...நிறைய நீறணிவார் எதிர் செல்லலே" அப்பர்-W-92-5.