பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங் குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 185 தெய்வமணமுள்ள நீலோற்பலம் மலர்வது என்றும் தவறாத தணிகை அரசே! வீரனே! கருணை மேருவே! தேவர் பெருமாளே! (சிவரூபம் அருள்வாயே) 273 பொருள் உள்ளவர்கள் எவர் எவர் என்று தேடிச்சென்று உள்ளம் மகிழ அவர்கள் மீது ஆசுகவிகளைப் பாடியும், உமது புகழ் மேருகிரியின் அளவுபோல உயர்ந்தது என்று மிகப் பலமான (துதி) மொழிகளைப் பேசியும் மாலைப் போதினில் ஒருமலர் ஆகஇவ் வரை மேல் நீலப் போது மூன்று ஒழிவின்றி நிற்றலு மலரும்" "ஊழி பேரினும் ஒருபகற் குற்பல மூன்றாய்த் தாழிருஞ் சுனை தன்னிடை மலர்ந்திடுந் தவிரா" (வள்ளியம்மை திருமணப்படலம் 221 - 3.) (நிற்றலும் நித்தலும்) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இம்மலர் பூத்து வந்ததாக எந்தையார் கூறக் கேட்டிருக்கின்றேன். இந்தச் சுனையின் தீர்த்தம் தான் இன்றும் சுவாமிக்கு அபிஷேகத்துக்கு உபயோகப் படுத்துகின்றார்கள் - ஆதலால் இந்தச் சுனையைத் தொழுது செல்லலாமே ஒழிய சுனையில் நீராடக் கூடாது. 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கச்சியப்ப முநிவர் . " காலை நண்பகல் மாலை முப்போதும் வைகல் வைகல் மலர் மூன்று தெரிக்கும். நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது" என்றார் தணிகை ஆற்றுப் படையில்; "நீரும் பூவும் திருமுடி என்றும் ஏறும்" என்றார் தணிகைப் புராணத்தில். இந்தச் சுனையில் நீலோற்பலக் கொடியை வைத்து மலர வைத்தால் அது சிவ புண்ணியமாகும்.' tஆசுகவி கொடுத்த பொருளை (நினைத்த கருத்தை அடுத்த பொழுதில் (உடனே) அமைத்துப் பாடும் பாட்டு.

  1. மேருகிரி - உயர்ச்சியைக் காட்டும். " மேருவரையின் மேம்பட்ட தவத்தான்" - பெரிய புராணம் - ஏயர் கோன் - 239,