பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று திருத்தணிகை திருப்புகழ் உரை 149 அலைகடலும் சூழ்ந்த இப் பூமிக்கு உயிர்நிலை ஸ்தானமுமாகிய திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே! (இனியார் தம் சபை தாராய்) 259 வினையைப் பெருக்குவதற்கு (அநுகூலச்) சம்பந்தமுள்ள கொங்கையை உடையவர், மன்மதனுடைய அம்புக்கு (அல்லது பாணமாம் குவளைமலருக்கு) ஒப்பாகும் கண்களை உடையவர். (ஆகிய) பொதுமகளிர் (மேல் வைத்த ஆசை காரணமாக) மிகவும் பலவான அவமானச் (செயல்களில்) நுழைந்து, விரும்பின கலவிப் போர்களில் ஈடுபட்டு (அல்லது கொடிய சண்டைச் செயல்களில் ஈடுபட்டு), கொடிதான துன்பங்களில் முழுகி அநுபவித்து, தாங்குதற்கு அரிய கவலை யடைந்து, பிறப்புக்கு அடி. கோலும் கருக்குழிகள் தோறும் (நான்) கவிழாமல் (பலயோனி பேதிங்களிற் கருவாய் விழாமல்) கலை வல்ல புலவர்கள் சீராக ஒதியுள்ள (உனது) திருவடித் (திருப்)புகழை ஒதும்படியான கலை ஞானத்தைக் (கல்வியை) தந்தருளுக. (வள்ளிமலையில் உள்ள) தினைப்புனத்துக்குப் போய் கொடிய வில்லேந்திய குறவர் கொடி - வள்ளியைப் புணர்ந்த அழகிய திருப்புயம் (பேரழகு) வாய்ந்த வேளே! கிரெளஞ்ச கிரி இருகூறுபட, கடலும் வற்றிப்போக, வானமும் புகை கொள்ள. கோபத்துடன் சூரனுடைய கனத்த, திண்ணிய மார்பு (பிளவுபட்டுத்) திறக்கப் போர் செய்த வீர வேலாயுதனே! திருப்புகழ் ஒதுங் கருத்துள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே! (கழற்புகழ் ஒதுங் கலை தாராய்)