பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 129 249 (அடையப் பசி யுற்றவருக்கு) முற்றப் பசியுடன் வந்தவருக்கு(அமைவுற்று) மன அமைதியுடன் (அமுதை) அன்னத்தைப்-பகிர்வதற்கு (ஒரு பங்கு எடுத்துக் கொடுக்க). (இசையாதே) மனம் வராமல். வைத்துள்ள எல்லாப் பொருளையும் கைவசத்தே (தாம் வரவர இளமை அடைவது போல) தமது இளமைப் பருவத்துக்கு எனச் சேகரித்து) வைத்து , அருள்நெறியில் நின்றும் தவறிப் போய், ஆணவக் கொழுப்பால் தளர்ச்சி ILJGðDL_LI JITLDGU சுற்றத்தார் சுற்றியழ, பறை கொட்ட, யமன் நெடுந்துாரம் உயிரைக் கொண்டு போகின்ற (அல்லது-யமன் தள்ளிக் கொண்டு உயிரைக் கொண்டு போகும்) -- (இந்த) உடலை (நிலைத்து) நிற்கும் என்று எண்ணி (அதற்காகப் பாடுபட்டுத்) தளர்ந்து ஒழிவதா என்தலைவிதி! இமயமலையில் வளர்ந்த (பர்வத ராஜனிடத்தில் வளர்ந்த) மயிலன்ன பார்வதிக்குத் தனது ஒரு பாகத்தை (இடது பாகத்தை) தந்தவராகிய சிவபிரானுக்கு - மனம் பொருந்த உபதேசித்தவனே! (அல்லது மனம் உவக்கச் (சம்பந்தராய்ப்) பதிகங்கள் சொன்னவனே) போரில் வந்து மோதி எதிர்ப்பவரைக் கழுகுக்கு (இரையாக அளிக்கும்) உணவாக்குகின்ற வீரங்கொண்ட் வேலாயுதத்தை உடையவனே! மதப் போராட்டம் செய்பவர் ( கூட்டத்தினின் றும்) விலகி, என் தவம் நிறைவுறவும், (உனது) திரு அருளில் (நான்) புகவும் (திருவருளை அடையவும்), நான் விரும்புகின்ற தாமரை யன்ன (திரு) முகங்களை உடைய குகனே! (சூரன்ொடு போர் முடிந்த பின். (வள்ளியை மணந்தபின்). நீ) புக்கு அமர்ந்துள்ள பெருமை வாய்ந்த தணிகையிற் குமரப் பெருமாளே! (தளர்வுற்றொழியக் கடவேனோ)