பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருவேங்கடம்) திருப்புகழ் உரை 113 245 கறுப்பு (மயிருடன்) இருந்த தலை வெள்ளை நிறத்தை மிகுதியாக அடைந்து, செழிப்புற்று இருந்த இரண்டு கண்களும் குழி விழுந்து ஒடுங்கி, கன்னத்தில் இருந்த சதைகள் (எல்லாம்) வற்றிப்போய் செவிகள் (வெறுந்) தோலாய் மெலிய கழுத்தின் அடிப்பாகம் முழுமையும் வளைந்து, கனத்திருந்த நீண்ட முதுகு குனிந்து குறுக, தாடையிலிருந்த பல் எல்லாம் விழுந்து ஒழிய, உதடுகள் நீர் (சொள்ளு) சோர (ஒழுக) தூக்கம் வரும் சமயத்தில் எலும்புகளை (அப்படியே) குலுக்கித் தள்ளும் இருமல் தொடங்க, அழுத்தமான பலமான குரல் நெரிபட்டு அடக்கம் கொள்ள, தடியே கால் போல் உதவ பலத்த நடை தளர்ந்து போகும் (இந்த) உடம்பு பழுத்திடும் முன்பு (மூப்பு முதிர்வதின் முன்பு) மிக்க நேசம் வைத்து உனக்கு அடிமை பூண்டுள்ள தொண்டர்களுக்குத் தொண்டு புரிய மாட்டேனோ! சிறுத்த மீன் சிறையிலிருந்து-மீனுருவம் கொண்டு பெருத்த அலைகளை வீசும் கடலிற் பதுங்கி மறைத்து வைத்த மறையை (வேதங்களை) மீட்டுவரத் தோன்றி வெற்றி பெற்ற திருமால், பாணத்தைப் பிரயோகஞ்செய்து அந்த வளைந்த கடலில் அணையைப் புதிதாக அமைத்து, இளையவனாம் இலக்குமணனோடும், (ராவணனது நிலைமையை) அறிந்து கோபித்த (இலங்கையில் தீ மூட்டி வந்த) அநுமாருடன் மகிழ்ந்து படையைச் செலுத்தி முன் பக்கத் தொடர்ச்சி புத்தகங்களைக் கைப்பற்றி மீண்டனர். ஏ செறித்து அவளை கடலில் - பாணம் பிரயோகஞ் செய்து அந்த வளைந்த கடலில். "உதடு நீர் சோர் உறக்கம் வருமளவில் எனப் பிரிக்க