பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கயிலை மலை திருப்புகழ் உரை 97 ஒழுங்கு பெற நின்று தேவர்கள்) தொழ நின்ற பெருமை விளங்கும் சீர் பொருந்திய (உனது) பாத தாமரையை அருள்வாயே; (சூரன்) அஞ்சும்படியும், சூரன் பிழைத்திராதபடியும் வேல்ை அன்றே செலுத்தித் தேவர்கள் சிறையினின்றும் மீள அன்பினுடனே, அவர் தம் விருப்பம் நிறைவேற, மேலான வாழ்வை (அவர்களுக்கு) அளித்த தேவநாயகனே! பராபர முதல்வனே! கொஞ்சுதல் போலக் காலில் மேவு சதங்கைகள் ஒலிக்க நடனம்செய்த கொன்றை குடியாம் சிவபிரான் நாள் தோறும் மகிழ்கின்ற புதல்வனே! பூங்கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய குன்றுகளின் சூழல் உள்ள மலைகளில் எல்லாம் (அல்லது சோலைமலை (பழமுதிர் சோலை) ஆகிய குன்றுகளில் எல்லாம்) விளையாடல் கொண்ட பெருமாளே! (பாத தாமரை அருள்வாயே) == 238ஒளி வீசும் (சோதி) இடத்தைப் பொருந்திப் பிராணவாயு செல்லும் இடைகலை பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி ஒட்டி சிவநெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே சிவச் சோதியை - பொம்மைக் கலியாணம் போலக் கூடி, விளங்கி நிற்கும் (காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்களும் எரிபட்டழியத் தீயைச் செலுத்தும் நகை புரிந்து ■ Sபாவை மணம் என மருவல் - பிரதிமை விவாகம் போலப் பாவித்தல் $திரிபுரம் . மும்மலம் முப்புரமாவது மும்மல காரியம்" திருமந்திரம்