பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல்) திருப்புகழ் உரை 93 திரைகள் போலப் (பெரிய) அலைகளை மோதி வருவதும், குளிர்ந்ததும், குடக நாட்டிலிருந்து (மேற்கிலிருந்து) வருவது மான காவிரியாற்றின் பெரிய அலைகளை அணைந்துள்ள (அலைகளுக்கு அண்மையில் உள்ள) திரிசிராமலை மேல் வீற்றிருக்கும் வீரனே! மலை நிலத்தில் வாழும் - வேடர்களுக்கு நாயகனே! ஆதிக் கணபதிக்குத் தம்பியாகிய நாயகனே! காவிரிக்கு நாயகனே! அழகுக்கு ஒரு நாயகனே! ஆனை (ஆனை வளர்த்த தேவ சேனைக்கு) நாயகனே! எங்கள் மான் போன்ற விழிகளை உடைய வள்ளியிடத்தே மகிழும் நாயகனே! தேவர்களுக்கு நாயகனே! கவுரி (பார்வதி) யின் நாயகனாராம் சிவபிரானுக்குக் குரு நாயகனே குரு மூர்த்தியே)! அழகிய மலை எல்லாவற்றிலும் வீற்றிருந்தருளும் தம்பிரானே! * - (மனோலயம் வந்து தாராய்) 236 வஞ்சகமும் ஈயாத குணமும் கொண்ட மூடர்களுடைய பொருளையும் ஊர்களையும் தேடி, மஞ்சரி (பாக்களின் கொத்து - மஞ்சரிப் பா - என்னும் பாவகை) கோவை, தூது எனப்பட்ட பலவகைப் பா இனங்களால் - (பாடல் நூல் இனங்களால்) - அவர்களை வண்மை (ஈதற் குணம் நிறைந்த) புகழ் வாய்ந்த பாரியே நீங்கள், காரியே நீங்கள் என்று புகழ்ச் சபதப் பேச்சுக்களைப் பேசி, புகழ்ந்து கூறுதற்கு என்றே (ராஜ சபையில்) ஏற்பட்ட தொழிலர் போல, வீணாக, (என் காலத்தை நான்) அழிவு செய்யாமல் - (உனது) செம்மை வாய்ந்த திருவடியையும், ஒலி இசை செயும் கிண்கிணியையும், கடப்ப மாலையையும், வலிய திறமை வாய்ந்த வேலையும், மயிலையும், முகங்கள் ஆறினையும்,