பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 85 மேம்பட்டு விளங்கும் வளமை பொருந்திய வில்லை நிகர்க்கும் நெற்றியின் மேல் உள்ள பொட்டும், அசைவுறும் பொற்குழையும் அழகு வீச முகத்தின் ஒளியின் சோதி பரந்து விளங்க, பற்களொடும் இதழொடும் கூடிய வாசனையுள்ள (செங்குமுத) மலரை யொத்த வாயினின்றும் இசைப்பாட்டுக்கள் எழ ஏந்தியுள்ள (தந்திகளுடன் கூடிய) வீணை சார்ந்துள்ள புயங்களின் மீது பலவித ஆபரணங்களுடன் ளங்கம் மணமுள்ள மலைக்கு நிகரான கொங்கைகளின் 燃து செழுமையுள்ள வாசனைப் பொடிகள் நெருங்கி அமைய, கொடி போல இடையிற்படுகின்ற புடைவையை அணிந்து, அழகாயுளது என்று கூறும்படி பொருத்த மாயுள்ள பர்த கிண்கிணியுடனும் பாதச் சிலும்புடனும் நடழிடு கின்ற பொதுமகளிராம் தீய்ர்களின் வித்தைக்காரர்களின் மோக மயக்கங்களில் முழுகுவது (முழுகும் குணமும் பழக்கமும் என்னை விட்டு) விலகாதோ! உரித்த கொடிய யானை, மான், புலி இவைகளின் தோலா டையைத் தரித்த சங்கரர், திங்கள், கங்கை இவை தமைச் சூடிய சடையினர், ஒப்பற்ற (பார்வதியை)ஒரு பாகத்திற் கொண்டவர் ஆகிய சிவபிரான் வணங்கிய குருபரனே! முருகனே! வெறுப்புற்றுப் (பகைத்து) வந்த அசுரர்களும், ஏழு கடல்களும், (கிரெளஞ்ச) கிரியும் பொடி படும்படியும்,_நூறு அசுவமேத யாகம் முடியும்படி உழைத்து இந்திர பதவியைப் பெற்ற இந்திரர்களும், பிரமனும் ழ்வுறும் படியும் செலுத்திய வேலாயுதனே! வண்டுகளின் வரிசையுள்ள துளவமாலை அணிந்தவரும், இலக்குமி பொருந்திய மார்பில் தாமரை மலரை உடையவரும், மரகதத்தின் (பச்சையின்) அழகிய நிறத்தினரும், கடல் மீது செலுத்திய பாணத்தை உண்டயவரும் ஆகிய திருமாலின் மருகனே! (வள்ளிமலைக்) காட்டில் வந்து ஒரு கிழவனென (வேடம் ಕ್ಹಾ ஒப்பற்ற குறத்தி, (அழகிய தினைப்) புனத்திலிருந்த கிளி ஆகிய வள்ளிய்ை - மயக்கி மந்திர உபதேசத் தலமாகிய குருமல்ை (சாமிமலை)யில் அமர்ந்தருளும் பெருமாளே! (கணிகையர் . மயல்களில் முழுகுவ தொழியாதோ)