பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 79 பேச்சுக்கள் பேசி எந்திரப் பொம்மை என்று சொல்லும்படி (எந்திரப் பாவைபோல) பல அங்கங்களையும் காட்டி மணமுள்ள கொங்கை ரவிக்கையை ஆட்டி அழகாக - சீரான ஆடையைத் தளர்த்திப் போர்த்து நூல் போல் நுண்ணிய இடையை நெளித்துக் காட்டி, "தி தெய" என்று (அல்லது-தீது ஏய பொருந்த) நடித்து நடனஞ் செய்து பாடல்களைக் குயில் போலப் பாடித் தம்மைச்சேரும்படி அழைத்துப் பார்த்துத் தம்மிடத்தேயே சார்ந்திருக்கும்படி மருந்து வகையைத் தந்து தம் (இஷ்டப்படி) ஆட்டி வைத்துச் சீரான பொருள்களைப் பறிக்கின்ற பொய்க்கூத்தராம் (வேசையரது) உறவு ஆமோ (உறவு கூடாது என்றபடி) சூரர்கள் பதைப்புறவும். தேர்கள், ஆனைகள் இவை அழியும்படி தாக்கியும், சூரனையும், எழு கிரியையும் (அல்லது. கிரெளஞ்ச கிரியையும்)சுட்டெரித்து (அச்சத்தைத் தந்த கிரெளஞ்ச கிரியைச் சுட்டெரித் து) (அப் பகைவர்களை) யமலோகத்துக்கு அனுப்பின வேலாயுதனே! து (பரிசுத்த) மொழியுடன் நகைசெய்து (மார்க்கண்ட ருக்காக) யமனை இறக்கும்படி உதைத்து, உரித்தெடுத்த தோலை உடையாகக்கொண்ட என் அப்பராம் சிவபிரானுக்கு உபதேச மொழியை ஏற்றிப் போந்தவனே! அழகியசடையை உடையவள், பால் போல் இனிய சொல்லை உடையவளாம் தேவி பார்வதி விசேடமாகப் போற்றுகின்ற மிக்க அழகியநிறம் விளங்குகின்ற குழந்தையே!

  • துமொழி என் அடியான் உயிரை வெளவேல்' என்னும் துமொழி: "என் அடியான் உயிரை வெளவேல்" என்று அடற் கூற்றுதைத்த பொன்னடி-சம்பந்தர் 1-52-3.

துமொழி தேவி எனக்கொண்டு தேவி உதைக்க-எனவும் பொருள் கொள்ளக் கிடக்கின்றது, யமண்ை உதைத்தது தேவி. சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி (திருப்புகழ் 751) கூற்றுவனைக் காய்ந்த அபிராமி - (திருப்புகழ் 760)