பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 77 பால்ய பருவத்தில் திரிதலுற்று, அழகிய மை பூசப்பட்ட கண்களை உடைய மங்கைமார்களிடத்தே நேசம் பூண்டு, (அவர்களுக்குத் தருவதற்காகப்) பொருள் தேடி மாலைகள், நல்ல பொன்னாற் செய்யப்பட்டு விளங்கும் சிறந்த ஆபரணங்கள், விசித்தரமான பொன்னால் வேலைப்பாடு அமைந்த ©Ꮍ❍©u) - (கம்மல்-காதணி) (இவைதமைப் பூண்ட பெண்களை) முத்தங் கொடுத்து (என்) ஆவி மிகவும் நொந்து திரிவேனோ! சூரனை வெருட்டி ஒட்டி அவனை அடியோடு (வேர் அறும்படியாகப்) பிளந்து சூழ்ந்துள்ள தேவர்களிடத்தே அன்பு காட்டின வீரனே! பன்றியின் உருக் கொண்டு அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம் நிறைந்த (அல்லது அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாய் இருந்த) திருமாலுக்கு மருகனே! ஏர் எதிர்த்து வர நீரைப் பாய்ச்சிக் கட்டி அப்போதைக்கப்போது இறைக்க வந்த பயனாய் விளைந்த ஒப்பற்ற (சாலியே) செந்நெல்களே பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிரம்ப உள்ள திரு ஏரகத்தில் (சுவாமிமலையில்) வீற்றிருக்கும் பெருமாளே! (ஆ.வி மெத்த நொந்து திரிவேனோ) 230 暉 நீண்ட கூந்தலை விரித்தும். தூக்கியும், வேல் போலும் விழியைச் சுழற்றிப் பார்த்து, வா என்று அழைத்துச் சிரித்து, (காதில் உள்ள) தோடும் குழைகளும் ஆட _ பன்றி உருவங் கொண்டு பாதாளத்திற்குச் சென்று தன் கொம்பினால் அவனைக் கொன்று பூமியைத் தனது கொம்பில் தாங்கி மேலே கொண்டு வந்து பழையபடி வைத்தார். எயிறதன் துதி மிசை இதமமர் புவி யது நிறுவிய எழிலர்"சம்பந்தர் -21-7