பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை 222. திருவடி பெற தனதன தனதன தனதான நிறைமதி முகமெனு மொளியாலே. நெறிவிழி கணையெனு * நிகராலே, உறவுகொள் மடவர்க ளுறவாமோ. உனதிரு வடியினி யருள்வாயே; மறைபயி லரிதிரு மருகோனே. மருவல ரசுரர்கள் குலகாலா, குறமகள் தனைமன மருள்வோனே. குருமலை மருவிய பெருமாளே. (28) 223. மயலற தனதன தானன, தனதன தானன தனதன தானன தனதான பரவரி தாகிய வரையென நீடிய பனைமுலை மீதினி லுருவானபணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி அயிலாலே, நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர் நிரைதரு மூரலி னகைமீது. நிலவியல் சேர்முக மதிலுயிர் மாமயல் நிலையெழ வேயலை வதுவாமோ,

  • நிகர்போர்