பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 61 காவேரி ஆற்றின் நேர் வடக்கே தடாகங்களில் (தாமரை ஆதிய) பூக்களின் மணம் வீசும் சோலைகள் நிறைந்த சுவாமிமலை முருக்னே! கரிய மேகம் போன்ற மேனியை உடைய பெருமை வாய்ந்த காளி, (பாலப்பருவத்தினள்) என்றும் இளையாள், சத்தி, மன்மதனை எரித்தவள், அழகி (அல்லது காமனை எரித்த சிவனது இடது பாகத்தில் இருப்பவள்) பெற்ற பெருமாளே! (பராபரத்தை நீ காண் எனா - அனைச்சொல் அருள்வாயே) 221. நிலவில் இருந்து வகைவகையான மலர்களைத் தெரிந்தெடுத்து, நிறைந்துள்ள கூந்தல் மேல் அணிந்து, காதின் குழை அள்வும் பாய்கின்ற ஒப்பற்ற வேல்கள் போன்ற கண்களின் ரேகைகள் விளங்க மொழிகள்- (இன்னது பேசுகின்றோம் என்னும்) நினைவு இல்லாமலே மொழிந்து, காம சாத்திரத்திற் (சொல்லியுள்ள) கலப்பான, (பலவித மனோரஞ்சிதமான (செய்கைகள்) கணக்கில்லாத வகையிற் செய்து, (கொவ்வைக்) கனி போன்ற வாயிதழ் ஊறலை உண்டு காமப் பற்றுப் புணர்ச்சியில் ஈடுபட்டுப் பொருந்தி மாதர்களிடத்தே மோக மயக்கங்கொள்ளும் வஞ்சகனாகிய என்னை ஆண்டருள உனது திருவருளைப் பாலிப்பாயாக உலகம் ஏழும், தேவர் உலகமும், சிவபிரான் தங்கும் உயரிய கயிலாயமும், பொன்மலையாம் மேருவும், உயிர்களும், (பிருதுவி-அப் பு:தேயுவாயு ஆகாசம் எனப்படும்) ஐந்து பூதங்களும் ஆக எல்லாமாகி, ஒரு முதற்பொருளாகி நின்ற உமாதேவியின் திருவருளால் வளர்ந்த கும்ரேசனே! பதறுதல் அடைந்த சூரனது உடல் அழியும்படி வேலாயுதத்தை எறிந்த குமரனே மிகக் கடுமை வாய்ந்தி மியிலில் வாழ்ப்வ்ன்ே விரும்பத்தக்க தோகைக் கண்களைக் கொண்ட (அல்லது எங்கள்) மயில் வாழ்வே (அல்லது) கடுமை வாய்ந்தவனே! மயில் வாழ்வே! கொடு முடியாய் (மலைச் சிகரமாய்) விளங்கி, மேகங்கள் தங்கும் இடம்போல உயர்ந்த குருமலைமேல் அமர்ந்த பெருமாளே! (கபடனை ஆள உன்றன் அருள்தாராய்)

  • அனைச்சொல். ஐக்கிய பதம்; அனை. அந்த அனை நால்வகையும்' -தொல். பொருள் 215.