பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 35 நிறைகடல் மொகு மொகு மொகு' எனவும்,வலிமை பொருந்திய பாம்பின் (ஆதிசேடனது) முடி நெறு நெறு' எனவும், நிறைந்த அண்ட முகடு கிடு கிடு' எனவும் மலையை யொத்து - உயர்ந்த திண்ணிய கழல்களைக் கொண்ட அவுணர் களுடைய மார்பும் தலைகளின் கொடிய கூட்டமும், மலைக்கு ஒப்பாகப் பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச் சொரிய வெட்டித் துணித்த திரனே! திறலும் (ஒளியும்) கருமையுங் கொண்ட கூந்தலமைந்த உமையவள் பெற்றருளிய தொளைக் கையையும் குளிர்ந்த மதமுள்ள யானை முகத்தையும் மிகக் கொண்டுள்ள சிவக்கொழுந்து போன்ற கணபதியுடன் வரும் (கணபதிக் குத் தம்பியாக வரும்) இளையோனே! கோபத்துடன் யமனை உதைபட வைத்த சிவபிரானது உள்ளம் அன்புறும் புதல்வனே! நல்ல மணிகளைச் சிதறும் திருப்பரங்குன்றத்தில் உறைகின்ற சரவண மூர்த்தியே! பெருமாளே! (சிறுமிகளால் வரும் துயரற அருள்வாயே) 7 (அணிந்துள்ள) மணிவடத்தினும் மேலோங்கிப் புளகிதங் கொண்ட அழகிய முலையைத் திறந்து (காட்டி) எதிர் வரும் இளைஞர்களுடைய உயிரை மயக்கி ஐந்துவகை மலர்ப் பாணங்களை உடைய மன்மதனை ஒப்பற்ற அருமை வகையால்வருவித்து வஞ்சகமான எண்ணத்துடன் மெல்ல மெல்ல நகைத்து நண்பு காட்டி வாரும் இரும் என உரை பேசி அங்கு அவர்களது ன் கொஞ்சிக் குலவி உ லைத்