பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 13 அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும் விண்ணுலகத்துச் சசி (இந்திராணி) பெற்ற பேரழகியுமாகிய தேவசேனையைக் கூடுதலுற்ற சித்தனே! ஒப்பற்ற அற்புதமான வேடர் குலத்து உதித்த அமுத சொரூபியான குறத்தி வள்ளியைத் (திரு) மணங் கொண்டவனே! (திரு) ஏரக மலையெனும் அற்புத மிக்க சுவாமி மலைப்பதியில் நின்றருளும் அழகனே அல்லது அழகும், ராஜதகுண் லட்சணங்களும் உள்ள லட்சுமியர்ம் பர்வதி பெற்றருளிய தம்பிரானே! (குத்திரர் சந்தம் ஆமோ) 199 உலக மாயையில் உற்று என் இல்லற வாழ்வில் ஏற்பட்ட அழகிய மனையாளின் கர்ப்பத்தில் உடலில் ஊறி. பத்து மாதம் நிறைய வடிவுடன் பூமியில் நன்கு தோன்றிய பொருளாகி (என் மனைவி வயிற்றிற் பிறந்த குழந்தை போல நீ தோன்றி) (நான் உன்னை) மிகவும் ஆசைப்பெருக்குடன் உச்சிமோந்து களிக்கும்படியும், கண்ணில் ஒற்றிக் களிக்கும். படியும், முகமொடு முகம் வைத்து களிக்கும்படியும் எனது மலையன்ன் புயங்களில் நீ உறவாடி (என்) மடிமீது அணைந்து விளையாடி, நாள்தோறும் உனது அழகிய திருவாயால் முத்தம் அளித்தருள வேண்டும். முக வசீகரங் கொண்ட குறமாது (வள்ளியின்) கொங்கையை அணைய வந்த நீதிமானே!

  • யான் என து அற்ற அடியார்களிடத்து ஓடிவந்து அவர்களை அணைதலே

கடவுளின் பேரருள் நீதி (கடன்). அத்தகைய நிலை வாய்ந்தவள் வள்ளி யாதலின் முருகவேள் தாமே வந்து அணைதல் நீதி(கடனென) எண்ணி வந்து அணைந்தார். “சிறுமிதனை. குறிச்சியிற் சென்று கல்யாணம் முயன்றவனே” (கந்,அலங்.24):குறமாதுடன் மால் கடனாம் எனவே அணைமார்பா' (திருப்புகழ் 563) எனவருவன காண்க. வள்ளி அநுட்டித்த தருமநெறி வள்ளிச் சன்மார்க்கம் எனப்பட்டது (திருப்புகழ் 317) (அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 302)